பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 15 பெருஞ்செல்வத்தை உடையவன்; அழிவற்ற பெருநிதியாகிய சிவச்செல்வம் அது. கின்னரி வாசிக்கும் கிளி 'கின்னரி வாசிக்கும் கிளி' என்று ஈற்றடி அமையுமாறு ஒரு பெண்பாச் சொல்லுக என்றார் ஒரு புலவர். சிவபெருமான் ஆலவாயிலே நடத்திய திருவிளையாடல் களும், அவனது கருணைப்பெருக்கும் தம் கண்முன் தோன்ற கவிஞர் அந்தச் சிறப்பை அமைத்து அப்படியே ஈற்றடி வருமாறு பாடுகின்றார். ஆடல்புரிந் தானென்றும் அந்நாளி லேமூவர் பாடலுகந் தானென்றும் பான்மையினால்-கூடலிலே நன்னரி வாசிக்கும் நடைபயிற்றி னானென்றும் கின்னரிவா சிக்கும் கிளி. - (19) ஆடல் புரிந்தான் என்றும் - பெருமான் முன் நாளிலே திருவிளையாடல்கள் பலவற்றைச் செய்தவன் என்றும், அந் நாளிலே மூவர் பாடல் உகந்தான் என்றும் அந்தக் காலத்திலே மூவராம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் எனும் மூவரின் பாடல்களை உவந்து அருள் செய்த பெருமானே என்றும் நன்னரி வாசிக்கு நடை. பயிற்றினான் என்றும் நல்ல நரிகளாகிய குதிரைகளுக்கு நடை கற்பித்துத் தன் அன்பனைக் காத்தவனே என்றும், கருதி'; கூடலிலே - மதுரைமா நகரிலே பான்மையினால் கிளி கின்னரி வாசிக்கும் - பண்புடனே கிளியும் அப் பெருமானின் புகழைப் பாடிக் கின்னரி வாசித்துக் கொண்டிருக்கும்! 'கிளி என்றது சிவையை, கின்னரி . வீணை வகையுள் ஒன்று. நா நீ நூ நே "நா நீ நூ நே' என்பவற்றை ஒரு வெண்பாவில் அமைத்துச் சுவைபடப் பொருட்செறிவுடன் பாடுக என்றார் ஒருவர். அரையின் முடியில் அணிமார்பின் நெஞ்சில் தெரிவை யிடத்தமர்ந்தான் சேர்வை-புரையறவே மானார் விழியீர் மலரணவொற் lறாகும் ஆனாலா நா நீ நூ நே. (20) என்று பாடினார் காளமேகம். இதன் பொருள்: . மான் ஆர் விழியீர் மானினது மருட்சி நிறைந்த கண்களைப் போன்ற கண்களை உடையவர்களான பெண்களே! மலரண ஒற்று நா நீ நூ நே ஈறு ஆகும். ஆனால் மலரண என்பவற்றின் ஒற்றுக் களான ம் ல் ர் ண் என்பவைகன் நா நீ நூ நே என்பவற்றின்