பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கூற்றுவனை ஏற்று உலகு இன்புறக் காற்றொழிலான் ஊற்றழிய உதைத்து எமனை எதிரேற்று உலகெலாம் இன்புறும் படியாகத் தன் திருவடியின் செயலான உதைத்தலினாலே (மார்க்கண்டன் பொருட்டு) இடையூறு நீங்குமாறு செய்தவன்; விண் மதனை உருவம் மாள நயனத்தால் எரித்து கரும்பு வில்லினனான மன்மதனை அவன் உருவம் அழியுமாறு நெற்றிக் கண்ணினாலே சுட்டெரித்தவன், அரக்கர் கோவைத் தோள்கள் இற விரலால் நெரித்து - அரக்கர் கோமானைத் தோள்கள் ஒடியுமாறு தன் விரல்களினாலே அழுத்தியவன்; கூன் நிலவை கற்றைக் கதிர் முடியில் சூடி - பிறைச் சந்திரனைத் தன் கற்றையான ஒளிர் சடையின் முடியிலே அது ஒளியுடன் திகழுமாறு சூடியவன்; குஞ்சரத்தை இமையப் பெண் வெருவக் கரத்தால் உரித்து இமவான் மகள் அஞ்சுமாறு யானையைத் திருக் கையினாலே தோலுரித்தவன், இஞ்சி மூன்றை எரித்தான் - திரிபுரக் கோட்டைகள் மூன்றையும் சாம்பராக்கியவன்; அவன் என்னை உடைய கோவே - அவனே என்னை அடிமையாக உடைய சிவபெருமான் ஆவன். நிரனிறைப் பொருள்கோள் (திருமால்) பொன்னனைவா ளரக்கனைநூற் றுவரைக் காவைப் - பொருசிலையைக் கனைகடலைப் பொன்ன னின்ற நன்மகற்காய்ச் சுரர்க்காயை வருக்காய்க் காதல் நட்பினுக்காய்ச் சானகிக்காய் நடவைக்காக மன்னுகிரால் வடிக்கணையால் வளையாற் புள்ளால் வயங்குதோள் வலியால்வா னரங்களாகும் முன்னுடற்கீ றிச்சிரங்கொண் டமரில் வீழ்த்தி முதலொடுங்கொண் டிறுத்தடைத்த மோகூ ரானே. (82) மோகூர் - பாண்டி நாட்டுள் ஒர் ஊர். பொன்னனைப் பொன்னன் ஈன்ற நன்மகற்காய் முன்னுடல் கீறி - இரணினை அவனின்ற நல்ல மகனின் பொருட்டாக முன்னாளிலே உடலைக் கீறிக் கொன்றவன், வாளரக்கனைச் சுரர்க்காய் வடிக்கணையால் சிரங்கொண்டு வாளாற்றல் மிக்க அரக்கனாம் இராவணனைத் தேவர்களின் பொருட்டாகக் கூரிய அம்பினாலே தலையைக் கொய்தவன்; நூற்றுவரை ஐவருக்கா வளையால் அமரில் வீழ்த்தி ஐவரின் பொருட்டாக நூற்றுவரான கெளரவரைத் தன் சங்க நாதத்தாலே போரிலே கொன்றழித்தவன்; காவைக் காதல் நட்பினுக்காய் புள்ளால் முதலொடுங் கொண்டு - தன் நாயகியாம் நப்பின்னைப் பிராட்டியின் அன்பு உறவினுக்காகக் கருடன் மூலமாகப் பாரிசாத மலர்ச்சோலையினையே வேரோடுங் கொணரச் செய்தவன்; பொருசிலையைச் சானகிக்காய் வயங்கு தோள் வலியால் இறுத்து போர்வில்லைச் சானகியை மணத்தற்