பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் சங்குதீர்த் தந்திருச் சாளரவா யில்வீர சிங்காச னந்திருவந் திக்காப்புப் - பங்குனிமா தத்திருநா டீர்த்தந் திருவினா தன்கோயில் உத்திரபா கந்திருவா ரூர். (88) சங்கு தீர்த்தம், திருச்சாளர வாயில், வீர சிங்காசனம் திருவந்திக்காப்பு, பங்குனி மாதத் திருநாள், திருவின் தீர்த்தம், உத்தரபாகம், நாதன் கோயில், இவை திருவாரூர்ச் சிறப்புகள். திருச்சாளர வாயில் - தியாகர் திருமுன்பே இருக்கும் பலகணிவாயில். வீர சிங்காசனம் - தியாகர் வீற்றிருப்பது. திருவந்திக் காப்பு - மாலை வேளையிற் சார்த்தும் திருக் காப்பு. பங்குனிமாதத் திருநாள் - திருவுத்திரத் திருநாள். திருவின் தீர்த்தம் - கமலாலயம் என்னும் திருக்குளத்துத் தீர்த்தம். கும்பகோணத்துச் சின்னங்கள் திருக்குடைந்தையிலே கும்பேசர் கோயில் கொண்டிருக்கும் ஆலயம் புகழ் பெற்றது. அதனையும் பிறவற்றையும் குறிப்பது இது. திருக்குடந் தையா திகும்பேசர் செந்தா மரைக்குளம் கங்கை மகங்கா-விரிக்கரையின் ஓரங்கீழ்க் கோட்டங்கா ரோணமங்கை நாயகியார் சாரங்க பாணி தலம். (89) திருக்குடந்தை ஆதி கும்பேசர் - திருக்குடந்தைப் பதியி னிடத்தேயுள்ள ஆதியான கும்பேசப்பெருமானின் திருக்கோயில்; செந்தாமரைக் குளம் - செந்தாமரை மலர்கள் பூத்திருக்கும் திருக்குளம்; கங்கை மகம் - கங்கைகள் வந்து கூடுகின்ற சிறப்பு உடையதான மகாமகக்குளம்; காவிரிக் கரையின் ஒரம் கீழ்க்கோட்டம் - காவிரிக் கரையின் அருகேயிருக்கும் கடந்தைக் கீழ்க்கோட்டம், என்னும் திருக்கோயில்; காரோணம் - திருக் குடந்தைக் கீழ்க்காரோணம் என்னும் தலம்; மங்கை நாயகியார் . மங்கை நாயகியார்கோவில்; சாரங்கபாணி என்னும் பெருமாள் திருக்கோயில் என்பன, குடந்தை நகரத்தின் சிறந்த சின்னங்கள் ஆகும். இச் செய்யுட்கள் பயில்பவர்களுக்கு யாப்பிலக்கணப் புலமையை நல்குவன: எந்தக் கருத்தையும் நொடியில் அமைத்துச் செய்யும் செய்யும் வல்லமையைத் தருவன. 6. கடவுளரைப் பாடியவை தலயாத்திரை நிமித்தமாகப் பல திருத்தலங்களுக்கும் சென்றவர் கவிஞர்; அவ்வவ்வூர்களில் இவர் பாடிய செய்யுட்கள் இவை. சில போற்றுதலாகவும், சில நிந்திப்பது போலத் தோற்றி