பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல் ? سعید جمع -------- “இந்தமாதிரி காதல் எனக்கென்னவோ விசி, திரமாக இருக்கிறது-இப்படியும் காதல் இருக் முடியுமா? "ஏனிருக்க முடியாது? காதலின் போக்கை இ. படித்தான் இருக்குமென்று வரம்பு கட்ட யாரால் முடியும்? 肇 "இருந்தாலும் நீ எழுதியிருப்பது கொஞ்சமும் நம்ப முடியாத விஷயம். கதை என்ருல் வாழ்க்கை யோடு ஒரளவு பொருந்தி இருக்கவேண்டும்-இந்தக் கதையை என்னல் ஒரு சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” அந்தக் கதையை எழுதிய இளம் எழுத் தாளனின் முகம் வாடிவிட்டது. அவன் உள்ளத்தில் கொழுந்துவிட்ட எழுத்தாவேசமெல்லாம் ஒரு கணத்தில் மடிந்தொழிந்தது போலத் தோன்றியது. மேலே கூறியவாறு பேசிக்கொண்டிருந்த இரு வாலிப நண்பர்களின் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டே நான் கடற்கரை மணலில் அமர்ந்திருந் தேன். சூரியன் மெதுவாக மறையத் தொடங்கினன். அவன் மறைவால் களையிழந்த உலகம்போல அந்த இளங்கதையாசிரியனும் சோர்வடையக் கூடர் தென்று நான் விரும்பினேன். அவனுடைய நண் பனுக்கும் அதுவே நோக்கம் என்ருலும் வாழ்க் கைக்கு இணங்காத முறையில் கதை எழுதக்கூடாது என்ற எண்ண ஆர்வத்தால் அவன் மேற்கூறியவா,