பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனம் 119 வயதிலேயே அவனுக்கு அத்தனை செல்வாக்கு ஏற்பட் டிருந்தது. ஆதலால் வேலாத்தாளை அவனுக்கு மணம் செய்து கொடுப்பதில் தாய் தந்தையருக்குப் பெரிய மகிழ்ச்சி உண்டாவதில் ஆச்சரியமில்லை. வேலாத் தாளின் இஷ்டத்தை அவர்கள் கவனித்தார்களா என்ருல் அது வேறு விஷயம். கல்யாணம் வேலாத் தாளின் விருப்பத்திற்கு முற்றிலும் மாருகப் பெற் ருேர்களின் வலுக்கட்டாயத்தினுல் நடந்தேறியது. ஐந்து ஆண்டுகள் வாழ்க்கைச் சகடம் எப்படியோ ஒடிற்று. மண்ணுக்கு உணர்ச்சி உண்டா? கல்லுக்கு உணர்ச்சி உண்டா? மண்ணைப் போலவும், கல்லைப் போலவும் வேலாத்தாள் வாழ்க்கை நடத்தினுள். ராமப்பன் அவளை மணந்துகொள்வதில் வெகு ஆசை கொண்டிருந்தான். ஆனல் அவனுக்கு வாழ்வில் இன்பங் கிடைத்ததா இல்லையா என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. வேலாத்தாள் அவனுக்கு விரோத மாக ஒன்றும் செய்யவில்லை. அவனுடன் கோபித்துக் கொள்ளவுமில்லை. அவனுடைய விருப்பத்திற்கு மாருக நடந்துகொள்ளவுமில்லை என்பது மெய்தான். அவன் கையிலே பச்சைக் களிமண்ணிருந்தால் அதை அவன் எப்படி எல்லாம் செய்துகொள்ளலாமோ அப்படி யெல்லாம் தன்னைச் செய்துகொள்ள விட்டு விட்டாள். ஆனால் அவள் உடம்புதான் பச்சைக் களிமண், நினைத்தபடி எல்லாம்வளைந்துகொடுத்தது. உள்ளம் எங்கேயோ எட்டாத இடத்தில் நின் றிருந்தது. உயிரைப் பற்றியோ பேசவேண்டிய தில்லை; அதுதான் குன்றிக் குலைந்துவிட்டதே. - மணமானது முதல் வேலாத்தாள் யாருடனும் சிரித்துப் பேசியது கிடையாது. கணவனிடமும் அப் படித்தான். தாய் தந்தையரிடம் முற்றிலும் பேசு வன்த்யே நிறுத்திவிட்டாள். அந்தக் கல்யாணம் வேண்டாமென்று கெஞ்சிக் கெஞ்சி அழுதழுது