பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனம் 135 "இரண்டையும் அவனே பார்க்கலாம். அது முடி பாதா என்ன? அவன் இதைப்போல இன்னும் ஒரு பண்ணை இருந்தாலும் பார்த்துவிடுவானே?” 'தம்பியெல்லாம் சரிப்படாது. பங்கும் பங்காளி களுக்கு வயிறு எரிய ஆரம்பித்துவிடும். வீண் கலவ ாங்களுக்கும் இடமாகும் ; வேறு யாராவதுதான் வேண்டும்” என்று வேலாத்தாள் கண்டிப்பாகப் பேசிள்ை. தாய்க் கிழவி மேலே வற்புறுத்தவில்லை. மெளனத்தைக் கலைத்துப் பேசியதே போதுமென இருந்தது. அந்த சமயத்திலே. பிறகு வெவ்வேறு ஆட்களைப்பற்றி ஆலோசனை நடந்தது. கடைசியாகக் கந்தப்பனைப்பற்றிப் பேசலாளுள் வேலாத்தாள். என்னமோ மடத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிருர்களாமே ? அப்படி யாராவது இருந்தால் இந்தப் பண்ணையைக் கவனிக்க........” கிழவியின் வயிற்றில் நெருப்பைக் கொட்டியது போலிருந்தது இந்த வார்த்தை. வேலாத்தாள் மனதில் என்ன முடிவை வைத்துக்கொண்டு மெளனத்தைத் கலைத்திருக்கிருள் என்ற உண்மை அவளுக்குப் பளிச்சென்று விளங்கிவிட்டது. தனது ஆசைக்கு இடமில்லை என்று தெரிந்ததும் கிழவி வெடுக்கென்று பேச ஆரம்பித்தாள். அவனஅவன் ஆகவே ஆகாது. உனக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னே ஊருக்குள்ளே பேசின. பேச்சுப் போதாதா ? அவன் இப்போ இங்கே வந்தால் 'உலகமே சிரிக்கும்.” - வேலாத்தாள் உள்ளம் மறுபடியும் ஒரே பாறை போல் கெட்டியாக மூடிக்கொண்டது. என்ன திருத்தைக்கொண்டு அ வ ள் இந்த யோசனை