பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசி ஒவியம் - ஒரே இருள். இருளுக்குப் போர்வையாக இருளையே அடுக்கடுக்காகப் போர்த்ததுபோல எங் கும் இருள் செறிந்து சூழ்ந்திருக்கிறது. கையிலே அள்ளி எடுத்துவிடலாம் என்று சொல்லும்படி அவ் வளவு காரிருள். அந்த இருளைப் பிளந்துகொண்டு வீர் என்ற குரல் கேட்டது. பச்சிளங் குழந்தையின் அழுகைக் குரல் அது. கேட்டவர்கள் உள்ளத்திலே திகிலும் இரக்கமும் மேலோங்கி எழ அந்த அழுகைக் குரல் இருட்டிலே ஊடுருவி வந்தது. இரவு பதினெரு மணி இருக்கும். குழந்தை மேலும் வீர் வீர்” என்று பரிதாபமாக அழுதது. என்னல் அதைக் கேட்டுக்கொண்டு படுக் கையிலே படுத்திருக்க முடியவில்லை. எழுந்து உட் கார்ந்தேன். மறுபடியும் அதே ஏக்கக் குரல். அண்டையிலே இருந்த ஒரு எளிய வீட்டிலிருந்து தான் குழந்தை அழும் குரல் வந்தது. பாவம் அதற்கு என்ன பிணியோ ; இப்படி அழுகிறதே" என்று நான் அந்த வீட்டை நோக்கி நடந்தேன். குழந்தையின்மேல் ஏ ற் ப ட் ட அநுதாபமா என்னைத் தூண்டியது ? ஆமாம் அநுதாபம்தான். இல்லை இல்லை; என் உள்ளத்திலே எழுந்த பயந்தான் என்னை வெளியே கிளம்பும்படி உந்தியது. என் னுடைய அருமைக் குழந்தைக்கும் அப்படி ஏதாவது நோய் வந்துவிட்டால் ? ஐயோ அதை நினைக்கவும் பயுமாக இருக்கிறது. ஏன் குழந்தைக்கு நோய் கண்டால் அந்தச் சமயத்திலே மற்றவர்கள் எனக்கு உதவி செய்ய வேண்டாமா? அவர்கள் வராவிட்டால்