பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காளிங்கராயன் கொடை என்னிடம் வரும்போதெல்லாம் அவருடைய இந்த கிலேமையைப் பற்றிப் பேசி ஏங்குவார். அவளே மகிழ்ச்சிப் படுத்த முடியவில்லையே; நீங்களாவது ஏதாவது ஒரு வழி சொல்லக்கூடாதா?’ என்று என்னிடம் கேட்பார். அவ ளுடைய மனத்திலே மறைந்து கிடக்கும் அந்தப் பாரம் என்னவென்று பரிவோடு கேட்டுப் பாருங்கள்’ என்று கான் ஆலோசனை கூறினேன். நான் கேட்டுப் பார்க்காமலா இருப்பேன்? எத்தனையோ தடவை எத்தனையோ வழிகளில் கேட்டிருக்கிறேன். அவள் ஏதாவது சொன்னல்தானே? கான் மகிழ்ச்சியோடு தானே இருக்கிறேன் என்ற ஒரே பதிலேத்தான் கொடுக்கிருள்' என்று விசனத்தோடு அவர் சொன்னர். அவளுடைய உள்ளத்திலே புகுந்து அதை அரித்துக் கொண்டிருப்பது என்னவென்று எனக்குத் தெரியும். அவ" ரிடம் அதைச் சொல்ல முடியுமா? முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. இத்தனை அன்பைச் சொரிகின்ற கணவனுக், குத் தகுந்த களங்கமில்லாத மனைவியாகத் தான் இருக்க வில்லையே என்றுதான் அவள் உள்ளம் கைந்திருக்கும். அன்பில்லாத கணவைைலும், தவறு செய்யும் கணவனுக இருந்தாலும் அவனைத் தெய்வமாகக்கொண்டு அவனுக்கு உண்மையாக வாழ வேண்டுமென்று நீண்டகாலமாக வர் திருக்கும் இந்த நாட்டு லட்சியமும் அவளே வாட்டியிருக்க வேண்டும். கணவன் தனது பேரன்பை அவளிடம் காட் டும் போதெல்லாம் அவள் உள்ளம் குழைந்து குழைந்தி, வெம்பிக் கொண்டிருந்தாள். நான் ஊமையாயிருந்தேன். அவள் உடல்நிலை மனப் பாரத்தைத் தாங்கமுடியா, தளரத் தொடங்கியது. அந்த மனப் பாரத்திற்குக் o: மாக அவள் உடலே மாசுபடுத்திய என்னல் அதைத் தின்: மும் பார்த்துக்கொண்டு அந்த இடத்திலே வாழ முழு வில்லை. எனது வீட்டை வந்த விலக்கு விற்று விட்டு