பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர்' 65: மன்க்கலக்கமும் ஏற்படவில்லை. அதன் பிறகுதான் என் மனச்சாட்சி என்னேக் குத்த ஆரம்பித்தது. முன்பு அவள் வேருெரு வீதியில் தன் தாயோடு வசித்து வந்தாள். கலியாணமாகிக் கணவன் வீட்டுக்கு வரவே எங்கள் வீதியில் என் வீட்டிற்கு எதிர்விடே அவள் இல்லற தர்மத்தை நடத்தும் இடமாய்விட்டது. எதிர் வீட்டுக்காரனே அவளுக்குக் கணவகை வாய்க்கும்படி எப்படியோ ஏற்பட்டுவிட்டது. காங்கள் முன்பின் அறியாதவர்கள்போலவே கடந்து வந்தோம். நான் அவளோடு ஒரு நாளாவது பேசவில்லை. அவளேச் சந்திக்கவும் நான் முயலவில்லை. அவள் கணவன் மட்டும் எனது நட்பை காடி வரலார்ை. அவரையும் எவ் வளவு தூரம் விலக்க முடியுமோ அவ்வளவும் விலக்கிவிட முயன்றேன். ஆனல் அவர் என்ன விடவில்லை. அவ ருடைய மனக் கவலைகளையெல்லாம் கூறிக்கொள்ளுவதற்கு கானே ஏற்றவன் என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது. அவருக்கு நிறைய சொத்து உண்டு. தம் மனைவி யிடத்திலே அளவற்ற அன்பு உண்டு. இருந்தாலும் அவர் மகிழ்ச்சியோடு வாழ முடியவில்லை. அவள் அவரிடத்திலே அன்போடுதான் பழகி வந்தாள். விட்டுக் காரியங்களே அவருடைய மனத்திற்குத் திருப்தி யளிக்கும் வகையிலே கன்ருகக் கவனித்து வந்தாள். ஆனல் அவள் உள்ளத்தில் ஏதோ ஒரு பாரம் இருந்து அவளே வாட்டிக்கொண்டிருந்தது. அவளே அன்பிலே மூழ் கடித்து அவள் வாழ்க்கையையே இன்பத் தேனகச் செய்ய வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த அவரால் அவ் வாறு செய்ய முடியவில்லை. எதையோ கினைத்து அவள் உள்ளுக்குள்ளே குமைவதாக அவர் உணர்ந்தார். 5