பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொங்கிற்ரு 7 81 கொண்டுபோய், அக்கிணற்றிலிருந்து தண்ணிர் மொண்டு வந்து ஊற்றி அவைகளுக்குத் தண்ணிர் காட்டலான்ை. நாளடைவில் அதுவும் முடியாது போயிற்று. மாடுகளுக்கு அவ்வளவு தூரம் கடக்கவும் சக்தி குறைந்துவிட்டது; அவனுக்கும் சலித்துப் போயிற்று. ராமசாமிக்கு இனி வேறு வழியில்லே. மாடுகளையே அவன் உயிராக மதித்திருந்தாலும் அவை எல்லாவற்றை யும் விற்றுவிடுவதைத் தவிர வேறு வகை கிடையாது. இந்த மாட்டுப் பொங்கல் வரையிலாவது அவற்றை வைத் திருக்கவேண்டும் என்று அவன் எவ்வளவோ முயற்சி பண்ணினன். தலைமுறை தலைமுறையாக அவர்கள் குடும் பத்திலே ஒராண்டிலாவது மாட்டுப் பொங்கல் வைக்கத் தவறியதில்லை. அதை இப்பொழுது எப்படி விட்டுவிடு வது? ஆளுல் மாடுகளில்லாமல் பொங்கல் வைக்க முடியுமா? மாட்டுப் பொங்கலேப் பட்டிப் பொங்கல் என்றும் கூறுவார்கள். விவசாயிகளுக்கு அதுதான் மிக முக்கிய மான கோன்பு. அவர்களுக்கு வாழ்வளிக்கும் மாடுகளுக்குத் தங்கள் கன்றியைச் செலுத்தவே அந்தப் பொங்கலே அவர் கள் அவ்வளவு உற்சாகத்தோடும் பக்தியோடும் கொண் 畫 м டாடுகிருர்கள். மழையில்லாத வறட்சி காலத்திலும் குடியானவர்கள் தங்களுடைய தொல்லைகளையெல்லாம் மறந்துவிட்டு அக்த நோன்பிலே ஈடுபடுவார்கள். பட்டி கோன்பு கொண்டாடாத வீடு அவர்களுக்குப் பாழ் வீடாகவே தோன்றும். ராமசாமி தனது பட்டியைக் கலைக்காமலிருக்கப் பல வகைகளிலும் முயன்ருன். பூமியையெல்லாம் அடகு வைத்துக் கடன் வாங்கிவிட்டான். அதற்கு மேலே கடன் கொடுக்க யாரும் இசையவில்லை. அந்த நிலையிலே வேறு ைெகயில்லாமல் விசனத்தோடு அவன் தன் மாடுகளேயெல் லாம் விற்கவேண்டியதாயிற்று. இப்பொழுது அவனுடைய :ண்ணேயின் லக்மீகரமே அடியோடு மறைந்துவிட்டது. 6