பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d முனனுரை வாழ்க்கை யென்ருல் அதிலே எத்தனை சிக்கல்கள்! ஒருவனுடைய வாழ்நாளிலே அவனுடைய மனதிலே எத்தனை எத்தனை உணர்ச்சிப் போராட்டங்கள் தோன்று கின்றன! முடிவில்லாத சிக்கல்கள்; ஓயாத போராட் டங்கள்-இதுதான் வாழ்க்கைப் பிரயாணத்தின் அடிப் படையான ரகசியம். - வாழ்க்கையும் மனமும் அவற்ருல் வளம் பெறுகின் றன; நலிவடைகின்றன; ஒங்குகின்றன; தாழ்வடைகின் தன. அவை வாழ்க்கைக்குப் பெருமை அளிக்கின்றன: சிறுமை அளிக்கின்றன. வாழ்க்கைக்குச் சுவை அளிப் ப்வையும் அவையே. சிக்கல்களையும் போராட்டங்களையும் ஒருவன் எப் படிச் சமாளிக்கிருனே அதைப் பொருத்து அவனுக்குப் பெருமையும் சிறுமையும், உயர்வும் தாழ்வும் ஏற்படு கின்றன. அவை ஒவ்வொன்றையும் அடிப்படையாகக்கொண்டு அழகான கற்பனைச் சித்திரங்கள், கவிதைகள், கதைகள் உண்டாக்கலாம். வாழ்க்கைச் சம்பவங்களையும், உள்ளக் இமுறல்களையும் வண்ணமாகக்கொண்டு கிராமத்தையோ ட்ெடணத்தையோ திரையாக நிறுத்தி, கற்பனைத்துாரிகை *ால் நவநவமான ஒவியங்கள் தீட்டலாம். கலைகளுக் இம், இலக்கியத்திற்கும் அவைதானே ஊற்று? -