பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 4 தங்கச் சங்கிலி பகீரென்றது. மணிபர்ஸைக் காணவில்லை. ஜனநெருக கத்திலே எந்த இடத்திலே இந்த ஜேப்படித் திருட்டு நடந்ததோ, யார் கண்டார்கள்? . கிருஷ்ணசாமி சில நிமிஷம் ஒன்றும் தோன்ருமல் ஸ்தம்பித்து நின்ருன். அவன் தலை கிறுகிறுத்த "எங்கே, பணத்தைச் சீக்கிரம் கொடுங்கள் என்று வியாபாரி அவசரப்படுத்தினன். 蠶 இந்தச் சேலை வேண்டாம் என்று தடுமாறிக் கொண்டு கிருஷ்ணசாமி பதில் சொன்னன். வேண்டாமென்று சொல்லுவதற்கா இத்தன்ை நேரம், அதை எடு, இதை எடு’ என்று தொந்தரவு செய்தாய்? பட்டியல் கூடப் போட்டாய்விட்டதே! என்று சேலையைக் காகிதத்தில் மடித்துக் கட்டிக் கொண்டிருந்த பையன் சீறின்ை. - கையிலே பணமில்லை’ என்று கிருஷ்ணசாமி குழறிக் குழறிக் கூறினன்.

பின்னே சேலை சும்மா கிடைக்குமெனறு வந்தாயா? கொஞ்சம் ஏமாந்தால் அப்படி.ே சுருட்டிக்கொண்டு போகிற ஆள் போலிருக்கிறது:

என்று மறுபடியும் அந்தப் பையன் குத்தலா பேசினன். i கிருஷ்ணசாமி தன் உள்ளத்தில் திடீரென்று எழுந்த கோபத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு. கடையைவிட்டு வெளியே வந்தான். அவனுக்கு உலகமே இருண்டு தோன்றியது. எங்கும் ஏமாற்று! வஞ்சனைய்ந்தான? இந்த நகரத்தின் ಕ್ಲಿಕ್ಡ லாம் வெளிப்பகட்டுத்தான? இத்தனை பேர் இந்தி கடைத் தெருவிலே உல்லாசமாகப் போய்க் கொன் டிருக்கிருர்களே. இவர்களெல்லாம் திருடர்க: தான? என்று இப்படி அவன் மனக் கசப்போக எண்ணமிட்டான்.