பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கச் சங்கிலி - i5 அவனுடைய ஆசையெல்லாம் பாழாகிவிட்டது. மலர்ந்த முகத்தோடு வழியனுப்பியருக்மிணி இதை அறியும்போது எத்தனை வருத்தமடைவாளோ? "ஐயோ! நான் என் வாழ்நாளிலே ஒரு நாள் கூடத் தவறு செய்ததில்லையே! நேர்மை தவறி நடந்த தில்லையே! அப்படி இருக்க எனக்கு எதற்காக இத்தனை பெரிய தண்டனை கிடைத்தது? என்று அவன் உள்ளம் குமுறின்ை. எத்தனை காலமாக எவ்வளவு சிக்கனமாக வாழ்ந்து சேமித்து வைத்த பணம்! அது ஒரு நொடி லே மாயமாகப் போய்விட்டதே! நல்லவர்களுக்கு இந்த உலகத்திலே காலமில்லை போலிருக்கிறது. என்னைப் போலவே அந்த ராமசாமியும் ஒரு குமாஸ் தாதான். அவன் இரண்டு கையிலும் லஞ்சம் வாங்கு கிருன். பெண்டாட்டிக்கு நல்ல நல்ல பட்டுச் சேலை கள்ாக வாங்கிக் கொடுக்கிருன். அவள் விரும்பியபடி யெல்லாம் நகை செய்து போடுகிருன், லஞ்சம் வாங்கியதால் அவனுக்கு என்ன குறைச்சல் வந்து விட்டது ? அவன்தான் இந்த உலகத்திலே சுகப் படுகிருன். நான் மனச் சாட்சிப்படி நடந்து என்ன பிரயோஜனம் ? என்று இப்படி மறுப்டியும் அவன் சிந்தையிலே பல வி த மா ன எண்ணங்கள் கொதித்தன. அவன் மூளை கலங்கிற்று. பஸ் நிற்கும் இடத் திற்குத் தன்னை அறியாமல் வந்து சேர்ந்தான். ஆனல், பஸ்ஸில் போக கையில் காசு வேண்டுமே ? நல்ல வேளையாகப் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பே விஷயம் ஞாபகத்திற்கு வந்துவிட்ட்து. இல்லா ஜிட்டால் பஸ் கண்ட்க்ட்ரிடம் வேறு பேச்சுக் கேட்க வேண்டும். நடு வழியில் பஸ்ஸை நிறுத்தி அவனைக் இழே இறக்கிவிடுவர்ன். அப்போது அந்த்ப் ப்ஸ்ஸில் பாகிறவர்கள் எல்லோரும் அவனை அலட்சியமாகப்