பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. துறவு'எனது' என்னும் பற்றைத் தவிர்த்தவன் வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதுபோல அனுமன் கடலைக் கடக்கப் பாய்ந்தான். ர.12:60

7. போர்

காற்றோடு கூடிய நெருப்பை அணைக்க முடியுமா? தெளிந்த வானில் உள்ள பகுதியை கண் கூசாது பார்க்க முடியுமா? மதங்கொண்ட யானையை அடக்க முடியுமா?

வ்வாறே இரகுவுடன் சேர்ந்த திலீபனைப் பகைவரால் வெல்ல முடியவில்லை. ர. 3:37

வீரர் அணியும் தலைக்கவசமே 'கோய்' என்னும் கள் குடிக்கும் பாத்திரம்; அவர்களுடைய குருதியே மது; அவர்கள் எய்த அம்புகளே மதுவைக் கலக்கும் கோல்; வெட்டி வீழ்த்தப் பட்ட தலைகளே மதுவுள் மிதக்கும் பழங்கள்.

போர்க்களம் காலதேவனின் கள்ளுக்கடையாகத் தோன்றுகிறது. ர. 7:49

புகை உள்ள இடத்தில் தீ உண்டு. ஆனால், புகை காற்று அடிக்கும் திசையில்போகும்; தீ ஒரே இடத்தில் இருந்து காற்றின் உதவியால் அருகில் உள்ளனவற்றை எரிக்கும்.

போர் மூண்டது. அஜனின் படைகள் முன்னேறின; பகைவர் பலம் உள்ள இடங்களில் அவை பின்வாங்கின.ஆனால், பகைவருக்கு நெருப்பு என்ன நின்ற அஜனோ, ஒரே இடத்தில் நின்று, அருகில் வந்த பகைவரை அழித்துக்கொண்டே இருந்தான்.

மன் அரக்கர் குழுவுள் நுழைய அஞ்சி நின்றான்; தன் கடமையைச் செய்யத் தவறினான். இராமனுடைய அம்பு தாடகையின் உரம் உருவித் தொளை செய்தது. அத் தொளையினுடே யமனும் நுழைந்து அவள் உயிரைக் கொண்டான்.