பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காளிதாசன் உவமைகள்
1. அரசன் அறம்

திரவன் தேரில் குதிரைகளைப் பூட்டுவது ஒரு முறை தான் பூட்டியபின் குதிரைகளுக்கு விடுதலையும் இல்லை, ஒய்வும் இல்லை.

காற்று இரவும் பகலும் இயங்குகிறது அதனின் இயக்கம் எப்போதேனும் நிற்கிறதா? காற்று வீசுவதில் வேறுபாடு காண்பதில்லை. யாவருக்கும் ஒரேவகையில் வீசுகிறது

திசேடன் தான் ஏற்ற நிலச்சுமையை எப்போதும் சுமந்து கொண்டே இருக்கிறான். அதை எங்கே வைப்பான்?

றில் ஒரு பங்குப் பொருளை வரியாகப் பெறும் அரசனுடைய அறமும் அவ்வாறே அரசினை ஏற்றபின் அவன் கடமையில் சோர்வதில்லை; கைவிடுவதில்லை அனைவருக்கும் ஒப்பப் பயன்படுகிறான் அவன் உள்ளவரை உலகத்தைக் காப்பதற்குத் தன் கடமையைச் செய்கிறான்.

சா. 5:1

ஞாயிறு தன் ஆயிரம் கதிர்களால் பல இடங்களிலிருந்து நீரை கொள்கிறான் நீரை எடுக்கையில் நீர்நிலைக்கு ஊறு செய்வதில்லை எடுத்த நீரை தூய மழையாக, வாழ உலகில் பெய்கிறான் நாடு செழித்து வளம் பெறுகிறது

பெற்ற வரிகளிலிருந்து அரசனோ, எடுத்த நீரினின்று ஞாயிரோ, தனக்கென எள்ளளவும் பயன்கொள்வதில்லை.

ரி கொண்ட இடமும், நீர் மொண்ட இடமும் மட்டும் அன்றி, எல்லா மக்களுமே ஒருசேரப் பயன் துய்க்கின்றனர் ர. 1:18