கலைஞரின் சட்டமன்ற உரைகள்
141
அவர் தி.மு.க. வுக்கு வந்து விட்டார் - எவ்வளவு நாட்களுக்குத் தான் அங்கே இருந்து கொண்டிருப்பது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட காங்கிரசில் இருந்தார் டிஸ்ட்ரிக்ட் செக்ரடரியாக
—
காரில் போய்க் கொண்டிருந்தார். நாங்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'மதுரைக்குப் போகிறோம்' என்று சொன்னோம். 'இந்தக் காரில் ஏறிக் கொள்ளுங்கள்' என்றார்.
அவருடைய காரில் காரில் ஏறிக் கொண்டு அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியைக் கண்காணிக்க சற்றுத் தாமதமாகச் சென்ற சென்ற காரணத்தால் முத்து அவர்களும், மற்றவர்களும் கிளர்ச்சிக்கு அங்கிருக்கும் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்திலிருந்து இறங்கி சாலைக்கே வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்தச் சாலையில் நான் கொஞ்சம் தள்ளி பின்னால் நின்று கொண்டிருந்தேன். நம்முடைய வேளாண்மைத் துறை அமைச்சர் மன்னை நாராயணசாமியும் இருந்தார்கள். அந்தச் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு போலீஸ் அதிகாரி மன்னை நாராயணசாமி அவர்களைப் பார்த்து 'தள்ளிப் போ' என்று சொல்ல, இவர் உடனடியாகத் தள்ளிப் போக முடியாது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இவர் கொஞ்சம் மெதுவாக அந்த முயற்சியில் ஈடுபட, அதிகாரி சொல்லுவதைக் கேட்க மறுக்கிறார் என்று கருதிக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டார்.
பிறகு அவர்கள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தினார்கள். நாங்கள் கூட அந்த இடம் வரை போகவில்லை. நானும் என்.வி,என். அவர்களும் தொலைவில் இருந்தோம். பிறகு இருவரும் சென்னைக்குத் திரும்பிவிட்டோம்.
அதற்குப் பிறகு எங்கள் இருவர்மீதும் அரசியல் சட்டத்தைக் கொளுத்தும்படி மதுரை முத்துவையும், மற்றவர் களையும் தூண்டிவிட்டதாக சதி வழக்கு போட்டார்கள். அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போவதாக அண்ணா அவர்கள் அறிக்கை விடுத்து, நாடு முழுவதும் விளம்பரப்படுத்தி காரியம் நடைபெறுவது சதியல்ல; ஆனாலும் சதி வழக்கு என்று எங்கள்மீது ஜோடிக்கப்பட்டு நாங்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டோம்.