உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

காவல்துறை பற்றி

சதிவழக்கில் போலீசார் சாட்சியம் சொன்னார்கள். அதில் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் சாட்சியம் சொன்னார். 'கருணாநிதி தமுக்கம் திடலில் சிறப்புக் கூட்டத்தில் பேசினார்; அப்படிப் பேசும்போது மதுரை முத்துவைப் பார்த்து அரசியல் சட்டத்தைக் கொளுத்து என்று ஆணையிட்டார்' என்று கூறினார். வழக்கறிஞர் கூட 'சிறப்புக் கூட்டத்திற்குப் போயிருந்தீர்களா? என்று கேட்க போயிருந்தேன்' என்று இவர் சொன்னார். 'சிறப்புக் கூட்டத்திற்குக் கட்டணம் உண்டா?' என்று கேட்டதற்கு இவர் 'உண்டு' என்று சொன்னார். 'என்ன கட்டணம் டிக்கட் வாங்கி உள்ளே சென்றீர்கள்? என்று கேட்டதற்கு 'எட்டணா டிக்கட் என்றார். 'எட்டணா டிக்கட் பெண்களுக்கல்லவா' என்று வழக்கறிஞர் கூறினார். இதற்கெல்லாம் பிறகு தீர்ப்பளிக்கப்பட்டது. 'எனக்கும் என்.வி.என். அவர்களுக்கும் ஆறு மாத காலம் சிறைத்தண்டனை' என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆக, சதி வழக்கு, பொய் வழக்கு இவைகள் எல்லாம் போடப்பட்டது அந்தக் காலமே தவிர, இந்தக் காலம் அல்ல என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் சொல்லுகிறேன்

இன்றைக்குப் பத்திரிகையில் என்னென்னவோ எழுதுகிறார்கள். எவ்வளவோ பயங்கரமான கார்ட்டூன்களை, கேலிச் சித்திரங்களை வெளியிடுகிறார்கள். வழக்குப் போட்டுக் கொண்டா இருக்கிறோம்? கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக செய்யப்படுகின்ற விவரங்களை இந்த அரசு பொருட்படுத்த வில்லை. அதற்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சில நாடகங்களைப் பற்றி காங்கிரஸ் உறுப்பினர்களே மேல்சபையில் கேட்டார்கள். தடை செய்ய வேண்டுமென்றார்கள். நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அந்த நேரத்தில் காங்கிரஸ் ஒன்றாக இருந்தது. எழுத்துச் சுதந்திரத்தைப் பறிக்கத் தேவையில்லை என்று சொன்னேன். நாடகங்களைத் தடை செய்யவேண்டுமென்று சொல்லவில்லை.

நூற்றுக்கணக்கான நாடகங்கள், புத்தகங்கள் ஆகியவற்றைப் பழைய காங்கிரஸ் அரசு தடை செய்திருப்பதை நாடு நன்றாக அறியும். நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அரங்கண்ணல் அவர்கள் அன்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் நடத்திய அறப்போர் பத்திரிகையில் ஒரு கேலிச் சித்திரம் வெளி