166
காவல்துறை பற்றி
சார்பில் அந்தக் காவல் துறை அதிகாரிகள் அனைவரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் (ஆரவாரம்). அந்தக் கூட்டத்தினர் நடத்தியது கொலை மாத்திரமல்ல, களவும், ரூ. 51/2 இலட்சம் வரையில் கொள்ளையடித்திருக்கிறார்கள். இதுவரையில் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் ரொக்கப்பணம் கொஞ்சமும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. புலனாய்வுத் துறை தொடர்ந்து தீவிரமாக தன்னுடைய விசாரணையை மேற் கொண்டிருக்கிறது.
குற்றங்கள், கடந்த காலத்தில் முதல் அமைச்சர் அவர்கள் முன்பெல்லாம் எடுத்துக் காட்டியதைப்போல் குறைந்து விடவில்லை என்றும் இது முதலமைச்சர் அவர்களுடைய திறமைக்கு ஒரு சான்று என்றும் நம் நண்பர் ஹாண்டே அவர்கள் எடுத்துக் காட்டினார்கள். அவர்கள் 1971, 1972 இந்த இரண்டு ஆண்டு களுக்கும் இந்த ஆய்வுத்துறையில் இருப்பதைப் பார்த்து 71-ல் 25,830 குற்றங்கள், 72-ல் 26,080 குற்றங்கள் என்பதைச் சொல்லி உயர்ந்திருக்கிறது என்றும் சொன்னார்கள். நான் இந்த ஆயிரம் உயர்வு அல்ல என்று சொல்லமாட்டேன். ஆனால் 1966-ல் 28,477-ல் இருந்து 1967-ல் 28,787ஆக இருந்து இப்போது 26,080 ஆகக் குறைந்திருக்கிறது. அது மேலும் குறைய வேண்டும்.
அதே நேரத்தில் இதிலே இருசார்புடைய கருத்துக்கள் இருக்கின்றன. குற்றங்கள் குறைந்திருப்பதுபற்றி ஆய்வுரையில் சொல்லும்போது நிறைய குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. நீங்கள் கண்டுபிடிக்காமல் விட்டு விட்டீர்களா என்ற கேள்வியும் எழலாம். அல்லது நிறையக் குற்றங்கள் நடக்கும் அளவிற்குக் காவல் துறை சரியாகப் பணியாற்றவில்லையா என்கிற கேள்வியும் எழலாம்.
ஆனால் இன்னும் குற்றங்கள் குறைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்காகத்தான் இன்னும் நவீன வசதிகளையெல்லாம் காவல் துறைக்குச் செய்துகொடுக்க இந்த அரசு தக்க முயற்சிகளையெல்லாம் எடுத்து வருகிறது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கள்ள நோட்டு வழக்குச் சம்பந்தமாகக்கூட மாண்புமிகு டாக்டர் ஹாண்டே அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். நாம்