கலைஞரின் சட்டமன்ற உரைகள்
167
1971-72-ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அந்த வழக்குகள் எதுவும் அப்படியே நின்றுவிடவில்லை. மேலும் முயற்சிகள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பூரில் நடந்த ஒன்றைப்பற்றிக் குறிப்பிட்டார்கள். திருப்பூரில் கள்ள நோட்டு வழக்கு விசாரிப்பதற்காகத் தனிக் கோர்ட் நியமிக்கும்படி உயர்நீதிமன்றத்தைப் போலீஸ் துறையினர் கேட்டார்கள். தனிக் கோர்ட் ஒரு மாதத்திற்கு முன்பு அமைக்கப் பட்டுள்ளது. ஆகவேதான் இதுவரையில் அந்த விசாரணை எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்கிறது.
சேலம் 1970-ம் ஆண்டு கள்ள நோட்டு வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. திருப்பூர் வழக்கோடு இந்த வழக்குத் தொடர்புடையது. அதுவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இப்படிப்பட்ட கள்ள நோட்டு வழக்குப்பற்றி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. 26-3-1973-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராயப்பேட்டை கள்ள நோட்டு வழக்கு. இதில் நாற்பது குற்றவாளிகள் மொத்தம் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் 19 பேர்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் 21 பேர்கள் இருக்கிறார்கள். இதில் முக்கிய குற்றமாகிய அச்சடிக்கும் குற்றம் கேரளாவில் நடந்தது ஆகவே நமது போலீஸார் இங்கேயே வழக்கு நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள், ஆனால் கேரளாவைச் சேர்ந்தவர்கள் இங்கு நடத்தக் கூடாது, கேரளாவில் வழக்கை நடத்தவேண்டுமென்று கேரளா கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கி விட்டார்கள். இப்போதெல்லாம் ஒரு பழக்கம், நம் மாநிலத்தில் வழக்கு நடத்தக் கூடாது, வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் அல்லது வேறு எங்கேயாவது நடத்த வேண்டும் என்பது. இதை இந்தக் கள்ள நோட்டுக்காரர்கள் எல்லாம் பின்பற்றி கேரளா கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் வாங்கியிருக்கிறார்கள். பின்னர் நம் போலீஸ் வாதாடி அந்தத் தடையை ரத்து செய்தார்கள்.