கலைஞரின் சட்டமன்ற உரைகள்
169
அதாவது கண்டுபிடிக்கிற பயிற்சிகளைப் பெற்று வந்திருக்கிறார்கள். இந்தப் பிரிவு நல்ல முறையில் பணியாற்று வதனால் கள்ளநோட்டு அச்சிடுபவர்கள் தொகை வர வர நிச்சயமாகக் குறையும் என்ற நம்பிக்கையை நாமெல்லாம் பெறலாம்.
-
மாண்புமிகு
அதேபோல் சிலை திருட்டுக்கூட உறுப்பினர்கள் சில பேர் சொன்னார்கள் பெரிய சிலை திருட்டு ஒன்று 1967ஆம் ஆண்டுவாக்கில் என்று கருதுகிறேன், சிவபுரம், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சிலையை, திலகர் என்பவர், அவர் உறவினர்கள், அவர் தகப்பனார், அங்குள்ள ஸ்தபதியார் எல்லோரும் சேர்ந்து 75 லட்சம் பெறுமானமுள்ள அந்தச் சிலை அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு நம் ஐ.ஜி. அவர்கள் அகில உலக இன்டர்போலில் அதைப்பற்றி விவாதித்து அமெரிக்காவில் உள்ள அந்த சிலையைக் கொண்டுவருவதற்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு அவர்களும் அதற்கான உதவிகளைச் செய்வதாகச் சொல்லி டி. ஐ. ஜி. அவர்கள் அமெரிக்கவுக்குச் சென்று எந்தவகையில் வழக்குகள் போடலாம் என்பதைப்பற்றி அதற்கான முயற்சிகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிவில் வழக்காக இருந்தால் உடனடியாக கேஸ் போட்டுவிட முடியும். கிரிமினல் வழக்குப் போடுவதற்கு அங்கு குற்றஞ்சாட்டி நிரூபிக்கும் அளவிற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு நமக்குத் தேவையாக இருக்கிறது.
மிக முக்கியமாக இந்த மானியத்திலே பேசிய எதிர்க்கட்சி யிலுள்ள உறுப்பினர்கள், தலைவர்கள் பலர் துப்பாக்கிப் பிரயோகங்களைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள். துப்பாக்கிப் பிரயோகங்களில் உள்ளபடியே நான், அப்போது எவ்வளவு நடந்தது, இப்போது எவ்வளவு நடக்கிறது. நேற்று எவ்வளவு இன்றைக்கு எவ்வளவு என்ற கணக்குகளைக் காட்டி, அன்று நடக்கவில்லையா என்று கேட்டு நான் பிரச்சினையைத் திசை திருப்ப விரும்பவில்லை. ஆனாலும் அந்தக் கணக்கு விவரங்களையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது