உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

காவல்துறை பற்றி

அவசியம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஏனென்றால், இதுவரையில் தமிழ்நாடு ஆட்சிப்பீடத்தில் உட்காராத டாக்டர் ஹாண்டே அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கலாம். திரு. தங்கமணி கேட்பதில் நியாயம் இருக்கலாம். ஆளும் காங்கிரசில் இருக்கும் சிலபேர் கேட்பதில்கூட ஒரு நியாயம் இருக்கலாம் (சிரிப்பு). ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் - இவ்வளவு துப்பாக்கி பிரயோகங்கள் நடக்கலாமா என்று கேட்கிற நேரத்தில் நாம் சிலவற்றை ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. 1962-லிருந்து 66 வரை 5 ஆண்டுகளில் 60 துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றன. இறந்தவர்கள் 64 பேர். 1967-லிருந்து 72 வரை ஆறாண்டுகளில் 46 துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்று இருக்கின்றன. இறந்தவர்கள் 45 பேர். நான் அதைவிட இது குறைவு என்று வாதிட விரும்பவில்லை. ஆனால் இந்த அரசின் மனோ நிலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்றிருக்கிற நேரத்திலெல்லாம் வேதனைக் கண்ணீர் வடித்து இருக்கிறது. ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் துப்பாக்கிதானா என்று நண்பர் மதி அவர்கள் வேகமாகக் கேட்டார்கள். அவர்கள் மிக வேகமாகப் பேசினார்கள். எரிமலையின்மீது நின்றுகொண்டு நீரோ மன்னன் வீணை வாசிப்பதுபோல நான் வாசிக்கிறேன் என் று எல்லாம் சொன்னார்கள். நான் சரித்திரத்தை

மறந்துவிட்டேன். நீரோ மன்னன் எரிமலைமீது நின்று பிடில் வாசித்தானா அல்லது ஏழடுக்கு மாளிகையின்மீது நின்று கொண்டு பிடில் வாசித்தானா அந்த விவரமெல்லாம் எனக்குத் தெரியாது. (சிரிப்பு).

ஆனால் போராட்டங்கள் எந்த அடிப்படையில் தொடங்கப் படுகின்றன. டாக்டர் ஹண்டே அவர்கள் சொன்னார்கள். துப்பாக்கிப் பிரயோகத்தில் 10 பேர் செத்து இருக்கிறார்கள். 12 பேர் செத்திருக்கிறார்கள் என்றால் சுட்டவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் அதற்கு மறைமுகமாக இந்த கருணாநிதிதான், முதலமைச்சர் கருணாநிதிதான் காரணம் என்று குற்றம் சாட்டுவேன் என்று டாக்டர் ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். அவ்வளவு அழுத்தந்திருத்தமான வார்த்தைகள் போடாவிட்டால், இன்றைக்கு அவர் பேச்சுக்கு ஒரு கிளைமாக்ஸ்