உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

காவல்துறை பற்றி

rate) என்ன? நம்முடைய மாநிலத்திலுள்ள மின்சார டாரிப் ரேட் என்ன? அதையும் நாம் குறைப்பதாக ஒப்புக்கொண்ட பிறகும், கோரிக்கை களை நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொண்ட பிறகும் இங்கே போராட்டம் நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகளில் தீர்த்துக் கொள்ளலாம். 12 கோரிக்கைகளா, அதில் 10 கோரிக்கைகளைப் பற்றி இப்போது பேசலாம் என்கிற அளவுக்கு இறங்கிவந்த பிறகும் இங்கே போராட்டம் நடைபெற்றது. ஆனால் ஒரு வரியில் மொழிப் போராட்டத்தை நிறுத்தியிருக்க முடியும். ஒரு வார்த்தையில் அந்த மொழிப்போராட்டத்தை நிறுத்தியிருக்க முடியும். இது அப்படி அல்ல.

இந்தப் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் விவசாயிகள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளான நேரத்தில் மதுரை மாநாட்டில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். பேசினார். அதைத்தான் திண்டிவனம் உறுப்பினர் ராஜாராம்கூட ஞாபகப்படுத்தினார். எம்.ஜி.ஆர். சொன்னார் சில இடங்களில் அராஜகம் நடைபெறுகிறது என்றால் அதை அடக்கும் பொறுப்பு போலீசாருடையது. போலீஸ் ஏன் சுட்டது? சுட்டது சரியா? என்று கேட்கிறார்கள். போலீசார் மக்களை வன்முறையாளர் களிடமிருந்து காப்பாற்றவும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் சுடவேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்” என்று ஆகஸ்ட் 6-ம் தேதிதான் நம்முடைய நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் மதுரை மாநாட்டில் பேசினார்கள்.

அதுமாத்திரமல்ல. இன்று நம்முடைய திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் பேச்சிலே கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி இரண்டுமுறை சொன்னால் அ.தி.மு.க.வைப்பற்றி 20 முறை சொல்கிறார். அந்த அளவுக்கு அவர்கள் அந்தக் கட்சியின்மீது பற்றும், பாசமும் கொண்டிருக்கிறார்கள். நான் அதிலே குறுக்கிடுவதற்கு எந்த உரிமையும் பெற்றவன் அல்ல. ஆனால் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த மாநாட்டிலேயே மேலும் பேசினார். நான் இந்தப் பேச்சைப் பார்க்கும்போது அந்தப் பேச்சையும் பார்க்க வேண்டியவன். மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். "கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்களே அவர்கள் நாட்டில் கலவரம் நடந்தால் முன்னுக்கு வருவதில்லை. ஏனென்றால், பின்னால் இருந்து கலவரங்களைத் தூண்டிவிட்டு