உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

173

விஷமங்களைச் செய்வார்கள். அவர்கள் விஷமத்தனங்களுக்கு அப்பாவிகள் இறையாவார்கள்”. ஆகஸ்ட் 6-ம் தேதி என்னுடைய அருமை நண்பர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதே மதுரை மாநாட்டில் எடுத்துக்கூறினார்கள். இந்தப் பேச்சில்தான் விவசாயப் போராட்டத்தைப்பற்றியும் அவர்கள் இங்கே குறிப்பிட்டார். குறிப்பிடும்பொழுது இவைகளை அங்கே எடுத்துச் சொன்னார்.

கொலைகளைப் பற்றியெல்லாம் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டது. அரசியல் கொலைகள் கிட்டத்தட்ட 1970-லிருந்து 1972 வரையில் ஒரு கணக்கு எடுத்தால் நாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகும்கூட 1970-ல் நடந்த அரசியல் கொலைகள் மொத்தம் 7. அதிலே கொல்லப்பட்டவர்கள் தி.மு.க. 2, காங்கிரஸ் 2, மற்றவர்கள் 3. அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டவர்கள் 1971-ல், அரசியல் கொலைகள் 9. கொல்லப்பட்டவர்களில் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் 3, காங்கிரஸ் 4,. 1972-60 அரசியல் கொலைகள் 5, கொல்லப்பட்டவர்களில் தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் 3, பி.எஸ்.பி. 1, காங்கிரஸ் 1. வேறு ஏதோ மணி மற்றவர்களைப் பற்றிச் சொன்னார்கள்.

காலையில் அம்மையார் அவர்கள் கருப்பையா, ஆறுமுகம் பற்றிச் சொன்னார்கள். அவர்கள் போலீஸ் கஸ்டடியில் (Custody) இறந்துவிடவில்லை. 14-ம் தேதி கைது செய்யப்பட்ட கருப்பையா உடல் நோய் காரணமாக ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, 17-ம் தேதி மரணம் அடைந்தார். அதேபோல், ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, மார்வலியின் காரணமாக பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, அந்த நோயின் காரணமாக இறந்தார் என்றுதான் எனக்குத் தகவல் கிடைத்து இருக்கிறது

நான் தமிழகத்தில் இந்த 3 ஆண்டுகளில் 1970-72 வரை நடைபெற்றுள்ள அரசியல் கொலைகளைப் பற்றிச்சொன்னேன். அதே நேரத்தில் கேரள போலீஸ் அமைச்சர் அங்கே சட்டசபையில் கொடுத்த தகவல்படி, 1970 முதல் 1972 வரை கேரளாவில் 53 அரசியல் கொலைகள் நடைபெற்று இருக்கின்றன.