உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

காவல்துறை பற்றி

அதிலே கொல்லப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 17 பேர், காங்கிரஸ் 12 பேர், கேரள காங்கிரஸ் 5, சி.பி.ஐ. 4, முஸ்லீம் லீக் 3, ஆர்.எஸ்.பி. 2, ஆர்.எஸ்.எஸ். 1, இதரர்கள் 7. இது “இந்து” பத்திரிகையில் 21-10-1972 அன்று வந்திருக்கிறது. கேரள போலீஸ் அமைச்சர் சட்டசபையில் கொடுத்த தகவல் என்று செய்தியும் வந்திருக்கிறது. ஏதோ பொய் வழக்குப் போடுகிறோம் முன்னேற்றக் கழகத்துக்காரர்களுக்கு ஏதாவது இடைஞ்சல் என்றால். . .

டாக்டர் எச்.வி. ஹாண்டே : அந்த அளவுக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் முன் கூட்டியே எச்சரிக்கை கொடுக்கிறோம். அந்த மாதிரி வரக்கூடாது, வன்முறைக்குச் செல்லக்கூடாது என்றும் சொல்கிறோம்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதைத்தான் நாம் அனைவரும் சேர்ந்து கோரஸ்ஸாகப் பாடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ஒருவர் சொன்னால் பிரயோசனம் இல்லை. எல்லோரும் சேர்ந்து வன்முறை தலை தூக்காது பார்த்துக் காள்ளும் பெரும் பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றுதான் நான் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னேற்றக் கழகத்துக்காரர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொடுக்கப்படுகிற புகார் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு உதாரணம் சொல்லுவேன்.

11-1-1973 அன்ற மதுரையில் சின்னாளப்பட்டியில் தி.மு.க. உறுப்பினர் ரமணி என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரில் என்ன குறிப்பிடப்பட்டு இருந்தது என்றால் அ.தி.மு.க.வைச் சார்ந்தவர்கள் ஏதோ விஷம் கொடுத்து அவர்களைக் கொன்று விட்டார்கள் என்பது போல் புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை விசாரித்த போலீசார் அந்த புகார் சரியானது அல்ல என்று சொல்லி இருக்கிறார்கள். ரமணி செத்தது உண்மை. கொல்லப்பட்டது உண்மை. கொலையுண்டது உண்மை. ஆனால் அ.தி.மு.க.வினரால் கொல்லப்பட்டார் என்று புகார் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்தப் புகார் உண்மை அல்ல..