காவல்துறை பற்றி
எ
கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உரை : 1
நாள் : 12.07.1962
கலைஞர் மு. கருணாநிதி : சட்டமன்றத் தலைவர் அவர்களே, இங்கு விவாதத்திற்கு வைக்கப்பட்டுள்ள காவல்துறை மான்யத்தில் எங்கள் சார்பில் அளிக்கப்பட்டுள்ள வெட்டுப் பிரேரணைகள் மீது எனது கருத்துக்களை இங்கு கூற விரும்புகிறேன். சுமார் 34,600 பேர் பணியாற்றுகிற இந்த பெரிய இலாகாவைப் பற்றி மிகத் தீவிரமாகவும், நல்லெண்ணத்தோடும், நாம் அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய கடமை யுணர்ச்சியோடு இருக்கிறோம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். 34,600 பேர் என்று சொல்லப்படுகிற இந்த பெரிய நிறுவனத்தில் ஏறத்தாழ 24,000 பேர் கான்ஸ்டபிள் என்று சொல்லப்படுகிறது.
பழைய போலீஸ் போலீஸ் அமைச்சராக இருந்து இன்று நிதியமைச்சராக இருக்கும் கனம் பக்தவத்சலம் அவர்கள் சொல்லக்கூடாது என்று ஒதுக்கி வைத்திருக்கிற காவலர் என்று அழைக்கப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். போலீஸார் என்று கூறுவதில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாருக்கும் கருத்து வேற்றுமை கிடையாது. காவலர் என்று கூறுவது களங்க முடைத்தது என்கிற எண்ணமும் எங்களுக்குக் கிடையாது. இந்தப் போலீசார் ஒரு பெரிய தியாக பரம்பரையை, நம் நாட்டில் உருவாக்கி வருகிறவர்கள், சிறப்பாகத் தமிழகத்தைப் பொறுத்த வரையில் சொல்ல வேண்டுமானால் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு, இந்திய துணைக்கண்டத்தில் வேறு எந்த
2 - க.ச.உ. (கா.து.)