உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

காவல்துறை பற்றி

மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நம் மாநிலத்தில் இருக்கிற போலீஸார் தங்களுடைய கடமையை ஆற்றி வருகிறார்கள் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. கடு மழையிலும், கொடிய வெயிலிலும், நள்ளிரவிலும் தங்கள் பணியினை கொலைகாரர்கள் மத்தியிலும், கள்வர்கள் இடையிலும் தங்கள் உயிரைப் பற்றிய கவலை இல்லாமல் மரணத்தை துச்சமாக மதித்து கடமைக்காக போராடி வருகிற அந்தத் தியாக சீலர்களை திராவிட முன்னேற்றக் கழகம் பாராட்டுவதற்கு கடமைப் பட்டிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் உழைப்பின் மேன்மையை உணர்ந்து அவர்களுக்கு மேலும் பல சலுகைகள் வழங்க வேண்டுமென்று கேட்பதும் இந்த வெட்டுப் பிரேரணை மீது நான் எழுப்புகிற குரல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னைமாநகரம் போன்ற சிலவிடங்களில் சென்ற ஆண்டு வரை காவல் நிலையம் என்று எழுதப்பட்டிருந்த பலகைகள் எல்லாம் திடீரென மாறி போலீஸ் ஸ்டேஷனாக காட்சியளிக்கின்றன. பெயர் மாற்றத்தில் அக்கறை இல்லாமல் பெயர் மாற்றம் என்றால் கேலிக்குரியது என்று கூறுகிற ஆளும் கட்சியினர் எவ்வளவு அக்கறையோடு அந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார்கள் என்று எண்ணும்போது கொஞ்சம் வேதனை எங்களுக்கு ஏற்படாமல் இல்லை. காவல் நிலையம் என்பது நல்ல தமிழ்ச் சொல் என்ற காரணத்தினால் அந்த நல்ல தமிழில் அது பொறிக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் எல்லாம் மகிழ்ச்சி யடைந்தோம். அதற்காக போலீஸ் அமைச்சராகிய இப்போது நிதியமைச்சராக இருக்கும் கனம் பக்தவத்சலம் அவர்களை நாங்கள் பாராட்டினோம். எங்களுடைய பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ, அல்லது இவர்கள் என்ன நமக்கு பாராட்டுகளை தெரிவிப்பது என்று கருதினார்களோ என்னவோ, அந்த வார்த்தையை உடனடியாக "மாற்றுங்கள், மாற்றுங்கள்" என்று இந்த மாமன்றத்திலேயே அப்போது வந்திருந்த அதிகாரிகளிடத்தில் சொல்லுகின்ற முறையில் கூறினார்கள் அமைச்சர் அவர்கள். அதன் காரணமாக எல்லா இடங்களிலும் அந்த வார்த்தை மாற்றப்பட்டது. அதற்குக் கூறிய காரணம்தான் உள்ளபடியே எங்களைப் புண்படுத்தியது. இந்த மாமன்றத்தில் வீற்றிருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். அந்தப் பக்கத்தில் (காங்கிரஸ் பக்கத்தில்) உறுப்பினர்களாக வீற்றிருக்கின்றவர்கள் எல்லாம்