உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

185

புத்தி சொல் என்கின்ற எக்காள முழக்கத்தைக் கேட்டேன். அவர் எங்களைவிட மத்திய அரசை வேகமாக எதிர்த்துப் பழக்கப் பட்டவர். இன்றைக்கு "மத்திய அரசே உடனடியாக வா, கவர்னரை வாபஸ் வாங்கு, இல்லாவிட்டால் மக்கள் இந்த அரசைத்தூக்கி எறிந்துவிடுவார்கள்" என்றெல்லாம் சொன்னார்கள். தூக்கி எறிந்திட திராவிட முன்னேற்றக் கழக அரசு பூப்பந்து அல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்வேன். (பலத்த கைத்தட்டல்). திராவிட முன்னேற்றக் கழக அரசு இமாலயம். இதை யாரும் அசைத்திட முடியாது என்று கூறி இந்த அளவிலே விடைபெறுகிறேன். மாண்புமிகு உறுப்பினர்கள் வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப் பெற்று, மானியத்தை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டு, இந்த அளவிலே அமைகிறேன்.