உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

211

எல்லோருக்கும் தெரியும். எடுத்துப் பாருங்கள் - எனக்குச் சந்தேகமாக இருக்கிறது எனக்கு வந்த தகவல் இப்படி இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறேனேயல்லாமல் இறந்தது உதயகுமார் அல்ல என்று நான் சொல்லவே இல்லை. அதற்கு நீதி விசாரணையே போடப்பட்டது. நீதி விசாரணையிலே கூட போலீஸ் அடித்து உதயகுமார் இறந்தான் என்று சொல்லப்படவில்லை. இறந்தது உதயகுமாராகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு போலீஸ் அடித்து உதயகுமார் இறந்துவிட்டான் என்று சொல்ல முடியாது என்றுதான் நீதி விசாரணையில் இருக்கிறது. இறந்தது உதயகுமாரா இல்லையா என்று தகவல் நல்லமுறையில் அறிய நீதி விசாரணை வைக்க ஒத்துக்கொண்டேன். அதற்குக் காரணம் சந்தேகமான செய்திகள் வருகின்றன, ஆகவே, நீதி விசாரணை வைப்போம் என்று ஒத்துக்கொண்டேனே தவிர வேறு ஒன்றும் அல்ல என்று, பல நாட்களாக சொல்லிக்கொண்டு வந்திருக் கிறார்களே, அதற்குப் பதிலாக அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : நான் அமைதியாகப் பேசுகிறேன். உதயகுமார் இறந்துபோனதுபற்றி நாங்கள் சொல்லிய நேரத்தில் என்ன தோரணையில் என்னைப் பார்த்து எள்ளி நகையாடக்கூடிய அளவில் - நீங்கள் பேசியிருக்கிறீர்கள். நாங்கள் உதயகுமார்தான் என்று சொன்னபோது நீங்கள் இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். பிறகு இறந்ததாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேமாதிரி பல விஷயங்கள் நாங்கள் அப்போது சொன்னதை இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இங்கு பேசப்பட்ட பிறகு நிரூபிக்கப்பட்ட பல விஷயங்கள் உள்ளன. தகவல் தவறாகவும் இருக்கலாம் அல்லது சரியாகவும் இருக்கலாம். ஆகவேதான் சொல்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நான் முதலில் சொல்லும்போது எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் சொன்னேன் என்பதை ஹாண்டே அவர்கள் மறந்துவிடக்கூடாது. அவருக்குத் தரப்பட்ட தகவல் தவறானது என்று சொன்னேனே தவிர வேறல்ல. பத்திரிகையிலே வந்த தகவலை வைத்துச் சொல்லியிருக்கிறார். ஆகவே குருசாமி சாகவில்லை என்றுதான் சொன்னேன். பதில் கூறும்போது நான் எவ்வளவு பொறுப்போடு, அடக்கத்தோடு சொன்னேன் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. முன்பு