உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

தலைவர்களெல்லாம்

காவல்துறை பற்றி

உதயகுமார் பற்றிப் பேசும்போது நான் எதிர்க்கட்சிகளை எள்ளி நகையாடுவதுபோல் பேசினேன் என்று சொல்வது தவறு. அப்படி எள்ளி நகையாடக்கூடியவன் அல்ல நான். எதிர்க்கட்சித் அப்போது இருந்திருக்கிறார்கள். படங்களைக்கொண்டுவந்து காட்டியிருக்கிறேன். பத்திரிகைகளில் போட்டு அடையாளம் கண்டுபிடியுங்கள் என்று சொல்லப்பட்டது. காவல்துறையிலிருந்து விளம்பரங்கள் செய்யப்பட்டன, யார் என்று கண்டுபிடியுங்கள் என்று. உதயகுமாராக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம், ஆகவே நீதி விசாரணை போடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டதே தவிர யாரையும் நான் நகையாடுவதில்லை. எள்ளி நகையாடுகிற பழக்கம் எங்களுக்கு இல்லை. வட ஆற்காடு மாவட்டம் மாதனூர் கிராமத்தில் ஒரு...

எள்ளி

திருமதி த. ந. அனந்தநாயகி : தகப்பனாரே தன் பிள்ளையை இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் காட்டினார்களே, அது போலீஸாரின் துப்பறியும் தரத்தைக் காட்டுகிறதா ?

மு

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : குளத்தில் மூழ்கி இரண்டு நாள் போனதால் எந்த ஒரு பிரேதத்தையும் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம் என்பதால் யாராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய கல்லூரித் தோழர்களால் கூடக் கண்டுபிடித்துச் சொல்ல முடியவில்லை. நெருங்கிப் பழகுகிற தோழர்களால் கூட யார் என்று சொல்வதற்கில்லை என்று சொன்னார்கள். உடனடியாகக் கிடைத்த சாட்சியங்கள் அப்படித்தான் இருந்தன.

வட ஆற்காடு மாவட்டத்தில் மாதனூர் கிராமத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்து எந்தக் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்றெல்லாம் எடுத்தவுடனே டெல்லிக்குத் தந்தி – இங்கு ஒரு அரசு இருப்பதாக யாரும் கருதுவதில்லை - பிரதமர் அவர்களுக்குத் தந்தி ஜனாதிபதி அவர்களுக்குத் தந்தி என்று இப்படி தந்திகள் எல்லாம் கொடுத்தார்கள்.

குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு இ. பி. கோ. 324-வது பிரிவின்படி ஆறு மாதம்