உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

215

மாண்புமிகு பேரவைத் தலைவர் : முடித்துவிடுவார்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அடிக்கடி உட்காரச் சொல்லி ஓய்வு கொடுப்பதில் திரு. கே. டி. கே. அவர்களுக்கு ஒரு ஆவல். அதிகாரிகள் ஆங்காங்கே நடந்துகொள்ளும் விதம். அதனால் ஏற்படும் தவறுகள் எல்லாம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. அவைகள் அனைத்திற்கும் நான் இங்கே பதில் சொல்ல நேரம் இல்லாவிட்டாலும், குறிப்பிட நேரம் இல்லாவிட்டாலும், நான் முதலில் குறிப்பிட்டதுபோல் ஏற்ற நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பேன் என்ற உறுதியைத் தெரிவித்து, இந்த மானியத்தின் மீது தரப்பட்டுள்ள வெட்டுத் தீர்மானங்களையெல்லாம் திரும்பப் பெற்று - 11/2 மணியாகிவிட்டது, நமது கட்சித் தலைவர்களெல்லாம் ஏற்கனவே களைப்பாக இருக்கிற காரணத்தால், அவைகளைத் திரும்பப் பெற்று இந்த மானியத்தை நிறைவேற்றித்தர வழிவகை செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் எஸ். ஐ. செலக்க்ஷனில் கன்னியாகுமரி அறவே விடப்பட்டது என்று சொன்னார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லிக்கொள்வேன். 1973-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 193 பேர். அதில் தென் மண்டலங்களைப் பொறுத்தவரையில் 193-ல் 74 பேர் இருக்கிறார்கள். நெல்லையில் 17, மதுரையில் 26, இராமநாதபுரத்தில் 24, கன்னியாகுமரியில் 5 பேர், செலக்ஷன் செய்யப்பட் டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நீலகிரிக்கு 5 பேர், தருமபுரி மாவட்டத்திற்கு 4 பேர்தான் தேர்வு செய்யப்பட்டிருக் கிறார்கள். ஆகவே, கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிக்கப்பட வில்லை, 5 பேர் செலக்ஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : தலைவரவர்களே,

எஸ். ஐ. செலக்ஷனைப்பற்றி ஒரு விளக்கம்

கேட்க

வேண்டுமென்று நினைத்தேன். இந்தத் தீயணைப்புப்படை போடுவதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கிருட்டிணகிரி, பண்ருட்டி, ஆரணி, மேட்டுப்பாளையம் போன்ற இடங்களுடன் என்ன காரணத்தாலோ