216
காவல்துறை பற்றி
குழித்துறை இதில் விடுபட்டிருக்கிறது. இதையும் அரசாங்கம் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த எஸ். ஐ. தேர்வில் கன்னியாகுமரி ஜில்லாவில் உள்ளவர்களை எடுக்கவில்லை, திருநெல்வேலி ஜில்லாவில் உள்ளவர்களைத்தான் எடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை எடுக்கவில்லை என்ற புகார் இருக்கிறது. நான் அதை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பிற்பட்ட சமுதாயத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்று இந்த அரசைப் பார்த்துக் கூறுவது கொஞ்சமும் பொருத்தம் இல்லாத காரணம். அரசின்மீது குற்றம் சாட்டுபவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், அரிசனங்களுக்கு அதிக இடம் கொடுக்கிறோம் என்பதுதான். ஆகவே எங்கேயாவது 1-2 புகார்கள் இருந்தால், அதைத் தெரிவித்தால் அதைப்பற்றி நான் கவனிக்கிறேன் என்று கூறிக்கொள்கிறேன்.
குழித்துறையில் ஒரு தீ அணைப்பு நிலையமும், வானியம்பாடியில் ஒரு தீயணைப்பு நிலையமும் நிறுவுவதை அரசு பு பரிசீலிக்கும் என்று கூறி அமைகிறேன்.