உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

217

உரை : 10

நாள் : 03.04.1975

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, காவல்துறை மானியத்தின் மீது ஆளும் கட்சியின் சார்பிலும், எதிர்கட்சிகளின் சார்பிலும் பல்வேறு கருத்துக்கள் இரண்டு நாட்களாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. பேசியவர்களில் மிகச் சிலர், சொல்லப் போனால் ஓரிருவர்தான், காவல் துறையில் இருக்கிறவர்கள் இன்னும் பல சலுகைகளைப் பெறவேண்டும், அவர்களுக்கு இன்னும் பல உதவிகள் அரசின் சார்பில் செய்து கொடுக்கப்படவேண்டும், காவல்துறை இன்னும் நல்லமுறையில் செயல்படுவதற்கு நவீன யுக்திகளை எல்லாம் கையாளுகிற முயற்சிகளை செய்ய அரசு முன்வரவேண்டும், என்கின்ற கருத்தை எடுத்துச் சொன்னர்கள்.

பெரும்பாலானோர் இந்த முறை காவல் துறை மீது மிகக் கடுமையான விமர்சனங்களைச் செய்திருக்கின்றார்கள். குறிப்பாக அவரவர்களுடைய தொகுதிகளில் நடைபெற்ற ஓரிரு சம்பவங்களை இங்கே எடுத்துக்காட்டி, காவல் துறையினர் மிகக் கடுமையாக நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டுகளைச் சொல்லி அந்தக் கருத்துக்களை மிக வேகத்தோடு எடுத்துரைத்து இவைகளுக்கெல்லாம் தக்க நிவாரணங்களைக் காண வேண்டும் என்ற அளவில் தங்களுடைய பேச்சுக்களை முடித்திருக் கிறார்கள்.

நம்முடைய பழைய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் பேசுகிற நேரத்தில் பல சம்பவங்களைக் குறிப்பிட்டுக் காட்டி அது சம்பந்தமாக காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள். மற்றும் சிலர் வேறு சில சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பதை எடுத்துச் சொன்னார்கள். பதிவு செய்யப்படவில்லை என்பதாலேயே பதிவு செய்யப்படாமலேயே போய் விடும் என்பது பொருள் அல்ல.