உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

235

இடத்தில் இருக்கிறார் என்று போலீசுக்குத் தகவல் தந்து உதவி செய்வார்களானால், நன்றாக இருக்கும்.

திரு. கோவை செழியன் : தலைவரவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்வதைப் பார்த்தால், தாமஸ் நாடாரைப் பற்றிய விவரங்களை எல்லாம் நான் தெரிந்து வைத்திருப்பதைப்போலவும், அவர் எங்கே இருக்கிறார் என்பதை நான் தெரிந்து வைத்திருப்பதைப் போலவும் சொல்கிறார். என்னைப் போன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது பல கருத்துக்களை ஆதாரமாகக் காட்டுகிறோம். எங்களுக்குப் பல ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள். அதை வைத்துப் பேசுகிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அவரைப் பார்த்திருக் கிறார்கள். நான் பார்த்ததுகூடக் கிடையாது. மைலாப்பூர் ஓட்டலில் அவரும் மற்றும் சில பெரிய மனிதர்களும் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்தில் டெல்லியிலிருந்து வந்த சி.பி.ஐ. டிப்பார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள் 46 நாள் தங்கியிருந்து, இது சம்பந்தப்பட்ட விபரங்களைச் சேகரித்து இருக்கிறார்கள். அந்த டெல்லி அதிகாரிகள்தான் இந்தச் செய்தியை என்னிடம் சொன்னார்கள். யார், யார் தங்கினார்கள் என்று கேட்டால் அந்த விபரத்தைத் தர நான் தயாராக இருக்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அதனால்தான் சொல்கிறேன் செழியனுக்கு இவ்வளவு விபரம் தெரிந்திருக்கிறது. என்று தன்னுடைய வீட்டுக்குப் போன் செய்கிறார்கள் உடனடியாகப் போலீசுக்கு சொன்ன செழியன் அவர்கள், இப்படி ஒரு சிலையைத் திருடிய ஆசாமி தலைமறைவாக இருக்கிறார் என்பது தெரிந்திருக்கும்போது அதைச் செழியன் கடமை உணர்வுடன் காவல் துறைக்கு போன் செய்திருந்தால் உதவிகரமாக இருந்திருக்கும் என்பதற்காகத்தான் நான் சொன்னேன்.

திரு. கோவை செழியன் : தயவுசெய்து இன்னும் அப்படிச் சொல்ல வேண்டாம். அது வேறு பக்கம் திருப்பி விட்டு விடும். இது எப்போதோ நடந்தது. பல மாதங்களுக்கு முன்னால் நடைபெற்றது. அப்போது எனக்குத் தெரியாது. இந்த