உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

காவல்துறை பற்றி

மானியத்தின் மீது பேசுவதற்காக 2, 3 நாட்களுக்கு முன்னால் செய்திச் சொன்னார்கள். அப்போதே தெரிந்திருந்தால், ஐ. ஜி ஜி. என்ன, கமிஷனர் என்ன, முதலமைச்சரிடமே சொல்லி யிருப்பேன். அவர் முதலமைச்சர் மட்டுமல்ல; என்னுடைய நண்பரும் கூட. அவரிடம் சொல்லி, இதைச் செய்யுங்கள் என்று கூடச் சொல்லியிருப்பேன். ஆனால் இந்தச் செய்தி 2, 3, நாட்களுக்கு முன்னால்தான் தெரிய வந்தது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இன்னும் அவர் என்னை நண்பராக வைத்துக் கொண்டிருப்பதற்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.

திரு. கே. டி. கே. தங்கமணி : பொதுவாக இந்த இரண்டு வருஷகாலமாக இந்த மன்றத்திலே பல சிலைகள் திருட்டுச் சம்பந்தமாகக் கேள்விகள் போடப்பட்டிருக்கின்றன. சிலை திருட்டைப் பார்க்குப்போது, சிலைகளைத் திருடி யாரோ கையில் வைத்துக் கொண்டிருப்பது மாதிரி செய்தி வருகிறது. அவர்கள் தான் சிலைத் திருட்டுக்கு ஏற்பாடு செய்கிறவர்கள். அப்படியானால் அந்தத் திருட்டுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதோடு, "not only receivers of the property but also abettors" என்ற முறையில் வந்தால் திருட்டுக் குறையும். அந்த மாதிரிப் போலீசார் செய்ய வேண்டுமென்று ஏதாவது தாக்கீது அனுப்பப் பட்டிருக்கிறதா?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : சூழ்நிலை யைப் பொறுத்து, சம்பவங்களைப் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் தீவிரமாக இதிலே போலீசார் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. சிலைகள் வெளிநாடு களுக்குச் செல்வதைத் தடுக்கின்ற வகையில் வெளிநாடுகளுக்கு நம்முடைய தலைமை காவல்துறை அதிகாரி ஐ. ஜி. அவர்கள் இந்தியாவின் சார்பில் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இன்டர்போலில் அதன் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்கள். இதுபற்றி அங்கே எடுத்துச் சொல்லப்பட்டிருக் கிறது. வெளிநாடுகளுக்கு இப்படிப்பட்ட சிலைகள் அதிகமாக ஏற்றுமதியாவதற்குக் காரணம், அங்கே கிராக்கி அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இருந்தால் 5,000, 10,000 ரூபாய்தான்