உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

காவல்துறை பற்றி

காலத்தில் இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்தது எவ்வாறு என்று சற்று ஆராய்ந்திட வேண்டும். அந்த இடைக்காலத்தில் இதை இரட்டிப்பாக கணக்கிடுகிற நேரத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழக அரசு காவல்துறையில் பணிபுரிகின்றவர்களும் மனிதர்கள் தான் அவர்களுக்கு குடும்பம், பெண்டுபிள்ளைகள் உண்டு, அவர்களுடைய வாழ்வும் செம்மையாக இருந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களுடைய ஊதிய உயர்வுகளில் தனி அக்கறை செலுத்தியது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இரண்டாவது நிலை கான்ஸ்டபிள் என்று சொல்லக்கூடிய சாதாரண காவலர்கள் அவர்களுடைய சம்பளம் 1970ஆம் ஆண்டு வரையில் அவர் களுடைய அடிப்படை சம்பளம் 70 முதல் 95 ரூபாய் வரை என்ற அளவோடு இருந்தது. 1970-க்குப் பிறகு அந்த சம்பளத்தை மாற்றி அடிப்படை சம்பளம் 150 ரூபாய் முதல் 225 ரூபாய் வரை என்று சாதாரண காவலர்களுக்கு உயர்த்திய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சாரும். இதை காவல்துறை நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் கழக அரசை வாழ்த்திய காவலர் குடும்பங்கள் எத்தனை என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும்.

அதைப்போலவே முதல் நிலை காவலராகப் பணி புரிகின்ற ஒரு புதிய பிரிவு கழக அரசு காலத்திலே உருவாக்கப்பட்டது.

இந்தியாவிலேயே, பிற மாநிலங்களிலே இல்லாத அளவுக்கு போலீஸ் கமிஷன் என்கின்ற ஒரு அமைப்பினைத் தமிழகத்திலே உருவாக்கி, அந்தப் போலீஸ் கமிஷனுடைய சிபாரிசுகளை, ஏறத்தாழ 134-க்கு மேற்பட்ட சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டு, அதில் 40-க்கு மேற்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப் படுத்தியதின் காரணமாக சுமார் 11/2 கோடி ரூபாய் செலவை ஏற்றுக் கொண்ட அரசு கழக அரசுதான்.

அப்பேர்ப்பட்ட சிபாரிசுகளில் ஒன்றுதான், எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கின்றவர்களுக்கு முதல் நிலை காவலர் என்கின்ற ஒரு பதவியைத் தரலாம் என்று போலீஸ் கமிஷன் பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையை கழக அரசு ஏற்றுக்கொண்டு, இந்த துறையிலே முதல் நிலை காவலர் பற்றி