கலைஞரின் சட்டமன்ற உரைகள்
261
தரப்பட்டிருக்கின்ற மானியக் குறிப்பீட்டின்படி, 4,309 பேர் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக் கிறார்கள். அவர்களுடைய அடிப்படைச் சம்பளம் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் என்று கழக அரசால் ஆக்கப்பட்டது. ஏற்கெனவே, தலைமை காவலர்கள் அடிப்படைச் சம்பளம் 70-90-110 ரூபாய் என்றிருந்ததை, 210-325 ரூபாய் என்று கழக அரசு உயர்த்தியது. துணை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு (அதாவது ஏ.எஸ்.ஐ.) அவர்களுடைய சம்பளம் 110-140 ரூபாய் என்ற அளவிலே அடிப்படை சம்பளம் இருந்ததை 250-400 ரூபாய் என்கின்ற அளவிற்கு உயர்த்தியது. சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 140-220 ரூபாய் என்றிருந்த ஊதியத்தை 300-500 ரூபாய் என்று உயர்த்தியது. டிபுடி இன்ஸ்பெக்டர்கள் அதாவது துணை இன்ஸ்பெக்டர்கள் என்ற ஒரு புதிய பதவியும் உருவாக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் களுக்கு 225-375 ரூபாய் என்றிருந்த ஊதியத்தை அடிப்படை ஊதியம் 425-700 ரூபாயாக உயர்த்தியது.
இப்படி அடிப்படை ஊதியத்தை மாத்திரம் உயர்த்த வில்லை. மற்ற அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட அகவிலைப் படியும் ஏதேனும் இருந்தால், அதையும் குறைக் காமல், அதே நேரத்தில் அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நேரத்திலே எல்லாம் அதற்கு ஈடாகக் காவல் துறையிலே உள்ளவர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப் பட்டது. இதையும் இன்றைக்கு நான் சுட்டிக்காட்டுவது பொருந்தும் என்று கருதுகிறேன்.
இப்போது 10 ரூபாய் இடைக்கால நிவாரணம் அளிக்கப் பட்டதில் 200 ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்குகிறவர்களுக்கு இந்த நிவாரணம் கிடைத்தது. அதற்குக் கீழே அடிப்படை ஊதியம் வாங்குகின்ற எத்தனை காவல்துறை அலுவலர்கள் இன்றைக்கு இதனுடைய பயனை அனுபவிக்காமல் வேதனைப் படுகிறார்கள் என்பதை இந்த அரசின் கவனத்திற்கு, குறிப்பாக நிதி அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு, அவர் வாயிலாக முதல் அமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துவைக்க விரும்புகிறேன்.
இது மாத்திரமல்ல, அண்மையிலே ஒரு வாரப் பத்திரிகை யில் ஓய்வுபெற்ற தமிழகத்தினுடைய காவல்துறை தலைமை