உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

காவல்துறை பற்றி

இது 21-6-1977-ல் நடைபெற்ற நிகழ்ச்சி என்றும், ஆனால் 25-6-1977-ல் அவர், அந்த முத்துசாமி இறந்து விட்டார் என்றும், அவர் இறந்துவிட்ட அடுத்தநாள், அவர் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்றும், அந்த அம்மையார் கண்ணீரும் கம்பலையுமாக, எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கெல்லாம் கடிதம் எழுதி, அந்த பிரதியையும் எனக்கு அனுப்பியிருக் கிறார்கள். இதை முதல் அமைச்சர் கவனிக்கவேண்டும் என்று சொல்ல விரும்புகிறேன். அந்தத் தந்தையில்லாப் பிள்ளையோடு தவித்துக் கொண்டிருக்கிற அந்த அம்மையாருக்கு இந்த அரசு நியாயம் வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டு மென்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன்.

இன்னொன்று, நாகர்கோவிலில் இருந்து வந்துள்ள கடிதம், வேலப்பன் நாயர் என்று ஒருவர், அவருடைய மகன் விஜயன் என்பவர் 17 வயது - தங்கையா நாடார் என்பவருடைய ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். அவரைப் பார்ப்பதற்காக அவருடைய தகப்பனார், வேலப்பன் நாயர் வந்தார். அந்த ஓட்டல் முதலாளியும் கேஷியரும் அவர் வெளியூர் போயிருக்கிறார். திருவனந்தபுரம் போயிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மறுநாள் பத்திரிகையில், அந்த வேலப்பன் நாயர் மகன் விஜயன், தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான் என்று செய்தி வருகிறது. விசாரித்துப் பார்த்தால் அது தற்கொலை அல்ல என்றும், அந்த ஓட்டல் முதலாளியும் கேஷியரும் சேர்ந்து அவனை அடித்ததால், அவன் இறந்து விட்டான் என்றும், அவர்களுடன் அந்தப் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு தற்கொலை என்று நம்பவைத்து விட்டார்கள் என்றும் வேலப்பன் நாயரும், கோட்டாரைச் சேர்ந்தவர், நாகர்கோவிலிலிருந்து கடிதம் எழுதி இருக்கிறார். இதுவும் அரசினுடைய கவனத்திற்கு வரவேண்டிய ஒரு அவசரமான பிரச்சனை என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

கழக ஆட்சியிலே இன்றைக்கு ஆளும் கட்சியாக இருப்பவர்கள், சில பேர் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரங்களும் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டன. இது இரு தரப்பிலும் நடைபெற்றிருக்கிற விவகாரங்கள்.