கலைஞரின் சட்டமன்ற உரைகள்
315
விரட்டிவிட்டு தனியாக இருந்த பெண்ணைக் கற்பழித்த மூர்க்கத் தனம். சென்னை திருவல்லிக்கேணி அயோத்தியாக்குப்பத்தில் வசிக்கும் குமரன் என்பவர் மகன்கள் இருவர் கடத்தப்பட்ட நிகழ்ச்சி. சென்னை அசோகா நகரில் சாந்தி என்ற பெண் கடத்தப்பட்டு கழுத்தில் கிடந்த தாலியை அறுத்துக்கொண்டு ஓட்டம். விரட்டிச் சென்ற கணவனுக்கு கத்திக்குத்து. துறைமுகத்தில் இரண்டு லட்சம் ரூபாய் சாமான் திருட்டு. சென்னையில் ஆட்டோரிக்ஷா டிரைவர்களிடம் கத்தி முனையில் வழிப்பறி. சென்னை ராயப்பேட்டையில் அதிகாரி மகள் சண்முகப்பிரியா கொலை. சென்னை தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் சௌரிராஜன் இல்லத்திலேயே அவருடைய மகளிடமே திருட்டு. சென்னை புரசைவாக்கத்தில் தாய் பூனம் மகள் அஞ்சு கொலை. நீதிபதி கோகுலகிருஷ்ணன் வீட்டிலேயே திருட்டு. ஒரு நீக்ரோ 12 வயது ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் கற்பழித்ததாகச் செய்தி. நேற்றுக்கூட தண்டையார்பேட்டையில் ஒரு கூலித் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்ற பத்திரிகைச் செய்தி இன்று காலையில்.
-
ஆக 60 நாட்களில் 51-இப்படிப்பட்ட கேட்கச் சகிக்காத படிக்கவொண்ணாத சேதிகள் பத்திரிகைகளில் வந்திருக்கின்றன என்பதை நான் இங்கே எடுத்துச்சொல்லக் காரணம் இரண்டு மாத காலத்தில் இவ்வளவு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் குறிப்பாக நம்முடைய தலைநகரிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன என்பது யாரும் மகிழ்ச்சியடையக்கூடிய விவகாரம் அல்ல.
பரிதாபகரமான ஒரு சம்பவத்தை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். ஏற்கெனவே அவர் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு என்ன காரணத்தாலோ அது அலட்சியப்படுத்தப்பட்ட சம்பவம். மதுரை மாவட்டம் பெரியகுளம் தாலுகா கண்டமனூரில் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் உத்தமபாளையம் கம்பம் நகரில் குடியிருந்த வி. முத்துவேல் என்ற பெயருடையார் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக என்ன ஆனார் என்றே தெரியவில்லை. காணாமல் போயிருக்கிறார். அவருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். நான் மதுரை சென்றபோது அவருடைய