உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

காவல்துறை பற்றி

மனைவியார் குழந்தைகளோடு வந்து என்னைச் சந்தித்து கண்ணீர் விட்டுக் கதறினார். 27-4-1978 இரண்டாண்டுகளுக்கு முன்பு அனுமந்தப்பட்டி பிரசிடெண்ட் நல்லுசாமி வீட்டுக்குச் செல்வ தாகவும் அவர் தன்னை வரும்படி அழைத்திருப்பதாகவும் மனைவியிடம் சொல்லிச் சென்றவர் திரும்பவே இல்லை. இவ்வாறு நாலைந்து நாட்கள் திரும்பாத நிலையில் மகன் நல்லுசாமி வீட்டுக்குச் சென்று தகப்பனாரைப்பற்றி தகவலைக் கேட்டபோது அவர் ஆவேசமாகப் பேசிய அவரைத் துரத்தியடித்துவிட்டாராம்.

மதுரை மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஒரு விழாவுக்குச் சென்றபோது அந்த அம்மையார் முதலமைச்சரைச் சந்திக்க வந்தார்கள் என்றும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை முதலமைச்சரின் செயலாளர் செய்துகொடுத்தார் என்றும் ஆனால் சந்திக்க முடியாத அளவுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் குறுக்கிட்டு முதலமைச்சர் அந்த அம்மையாரைச் சந்தித்து குறைகளைக் கேட்க முடியாத அளவுக்குச் செய்துவிட்டார்கள் என்றும் எனக்குத் தகவல்கள் கிடைத்தன.

கு

அதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற கம்பம் நடராஜன் அவர்கள் போலீசாருக்கு அதைப்பற்றிப் புகார் செய்தார்கள். ஆனால் வழக்குகளைக் கண்டுபிடிப்பதிலே மிகவும் திறமைபடைத்த தமிழகத்துப் போலீசார் 31-8-1979ஆம் தேதியன்று கம்பம் நடராஜனுக்கு எழுதிய பதிலில் அந்த வழக்கு கண்டுபிடிக்கப்பட முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்று தெரிவித்துவிட்டார்கள். இப்போது ஒன்பது குழந்தைகளையுடைய அந்தத் தாயார் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார்கள். அவர்களுடைய வாழ்வுக்கு எந்தவிதமான வகையும் செய்யப்பட வில்லை. அவர் காணாமல் போய்விட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு மறைக்கப்பட்டதா ?

திருவையாற்றிலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் வெங்கடாசலத்தினுடைய நிலைமைதான் அவருக்கும் ஏற்பட்டதா ? எப்படி வெங்கடாசலத்தினுடைய நிலை என்ன என்பது இன்னமும் தெரிவிக்கப்பட முடியாமல் இருக்கிறதோ அதைப்போலவேதான் அந்த ஓய்வுப்பெற்ற ரெவின்யூ இன்ஸ்பெக்டர் நிலையும் இருக்கிறதா என்பதை இந்த அரசினுடைய கவனத்திற்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.