கலைஞரின் சட்டமன்ற உரைகள்
319
தந்திருக்கின்ற அறிக்கையையும், நம்முடைய முதலமைச்சரவர்கள் கையெழுத்திட்டு இங்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வுரையையும் காணுகின்ற நேரத்தில் அவர் தனியாகச் சமுதாய விரோதிகள் என்று ஒரு சாராரைப் பிரித்து அவர்கள்தான் இந்தக் கலவரங்களில் ஈடுபட்டார்கள் என்று குறிப்பிட்டிருப்பது சற்று உண்மைக்கு மாறாக தகவலைத் தருகின்ற ஒன்றாகும் என்பதை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
அதே ஆய்வுரை அறிக்கையிலே 69ஆம் பக்கம் நம்முடைய நண்பர் திரு. சுந்தரராஜன் அவர்கள்கூட இங்கே படித்துக்காட்டினார்கள். இதைத்தான் நான் கொஞ்சம் விரிவாகச் சொல்ல விரும்புகிறேன். “1980ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2ஆம் நாளன்று அ. தி. மு. க.வும் அதனைச் சார்ந்த கட்சிகளும் தமிழ்நாடு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு அ. தி. மு. க. அரசு நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் காமராஜ் சிலையிலிருந்து சீரணி அரங்கத்திற்கு ஊர்வலமாகச் சென்றன. ஊர்வலத்தின்போது ஊர்வலத்தின் கட்சி தொண்டர்களின் உணர்ச்சிகளை சில சமூக விரோதிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு தனியார் பொதுச் சொத்துக்களையும் காவலர்களையும் தாக்கினர். வன்முறைக் கூட்டத்தினர் டி2 காவல் நிலையத்தையும் தாக்கினர். வன்முறைக் கூட்டம் டி2 காவல் நிலையத்தில் புகுந்து மேசை நாற்காலிகள் முதலியனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தி மின் விளக்குகளை உடைத்து காவலர்களைத் தாக்கி சென்ரி காவலரிடமிருந்து துப்பாக்கியைக் கைப்பற்ற முயற்சி செய்ததால் சென்ரி காவலர் 1654 ராமர் தற்காப்புக்காகவும் ஆபத்தான நிலையில் இருந்த பிற காவலர்களின் உயிரைக் காப்பாற்றுவதற் காகவும் அரசுச் சொத்துக்களுக்கு மேற்கொண்டும் சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் தனது .410 துப்பாக்கியைக் கொண்டு ஐந்து முறை வானத்தை நோக்கிச் சுட்டார். 37 காவலர்களும் தீயணைப்புத் துறை பணியாளர்களும் இச்சம்பவத்தில் காயமுற்றனர்." என்று முதலமைச்சருடைய ஆய்வு அறிக்கை இங்கே தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. இங்கேயும் சமூக விரோதிகள் வருகிறார்கள். இங்கே ஆட்சி கலைக்கப்பட்டதை எதிர்த்து அனைத்துக் கட்சியினரும் ஊர்வலம் நடத்துகிறார்கள். நம்முடைய நண்பர் சுந்தரராஜன் அவர்கள் சொன்னார்கள். யாரோ