320
காவல்துறை பற்றி
ஒருவருடைய சிலையை எதிர்க்கட்சித் தலைவருடைய சிலையை உடைப்பதற்காக முயன்றார்கள் என்று. அந்த நல்ல காரியம் என்னுடைய அருமை நண்பர்களால் விரைவிலே நடைபெறு மானால் உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைவேன். அதற்காக நான் வருத்தப்படமாட்டேன். ஆனால் நான் இங்கே குறிப்பிட விரும்புவது சமுதாய விரோதிகள் காவல் நிலையத்தைச் சூழ்ந்தார்கள், சமுதாய விரோதிகள் காவலரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயன்றார்கள் என்றெல்லாம் இங்கே நம்முடைய முதலமைச்சரவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்
—
நான் கேட்டுக்கொள்ள விரும்புவதெல்லாம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏடுகளிலே வந்த செய்தியின்படி கிட்டத்தட்ட 235 பேர் பெரும்பாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்கள்மீது போடப்பட்டிருந்த வழக்கு இந்தச் சம்பவத்தையொட்டி போடப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் சமூக விரோதிகள் என்று நீங்கள் திட்டவட்டமாக இந்த ஆய்வுரையிலே கூறியிருக்கின்றீர்களே அப்படியானால் சமூக விரோதிகள் மீது போடப்பட்ட வழக்குகளை நீங்கள் ஏன் வாபஸ் வாங்கினீர்கள் ? அவர்கள்தான் தி. மு. க. வும் அல்ல; அ. தி. மு. க. வும் அல்ல சமூக விரோதிகள் அப்படியானால் அந்த 235 பேர் மீது போடப்பட்ட சமூக விரோதிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதற்கான காரணம் என்னவென்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
ஆக, சமூக விரோதிகள் என்பதை, ஆளுங்கட்சிக்காரர்கள் என்று சொல்லக் கூச்சப்பட்டு, நீங்கள், சமூக விரோதிகள் என்று சொல்லி இருப்பது - இந்த அறிக்கையின்மூலம் நீங்களே தந்திருக்கின்ற உண்மையான தகவலே தவிர வேறல்ல என்பதையும் சுட்டிக்காட்டுவது என்னுடைய பெரும் கடமையாகும்.
ஆய்வுரையில் - நான் ஆய்வுரையை வைத்துக்கொண்டே பெரும்பாலும் இன்றைக்குப் பேசுகிறேன் - ஆய்வுரையில் முதலமைச்சர் கையெழுத்திட்டு வைக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் 44-45-ஆம் பக்கங்கள் மிகவும் முக்கியமான பக்கங்கள் ஆகும். 'திருச்சி சிம்கே மீட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 1978ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் நாள் முதல் 1979 ஆம்
6