உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

345

கையைப் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள். 23 கோடி ரூபாய் டர்ன் ஓவரில் அவர்களாகக் காட்டிய நிகர இலாபம் 4 கோடியே 38 இலட்சத்தில் 4 கோடியே 60 இலட்சம் ரூபாய் விளம்பரச் செலவு என்று கணக்கெழுதி காட்டி முடித்து விடுகிறார்கள்.

இதிலே இன்னொரு வேதனை என்னவென்றால் மதுவிலக்கு தமிழ்நாட்டில் நம்முடைய அருமை நண்பர் திரு. எம். ஜி. ஆர். அவர்களுடைய காலத்திலேயே இப்படி ஒரு புதுவிதமான மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபோது இதற்காக விளம்பரங்கள் செய்யக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. விளம்பரம் செய்வது சட்டப்படி தவறு என்று இருக்கிறது. ஆனாலும் விளம்பரச் செலவு 4.60 கோடி என்று எழுதப்பட்டு எங்களுக்கு மிச்சமே இல்லை என்று அந்தக் கம்பெனி கணக்குக் காட்டுகிறது. அதைப்போல இன்னொரு கம்பெனி அவர்களுடைய கணக்குப்படி 3 கோடி ரூபாய்தான். அவர்களுடைய சென்ற ஆண்டு டர்ன் ஓவர் 17 கோடி ரூபாய்.

அதிலே மொத்த செலவினம் என்று அவர்கள் கணக்குக் காட்டுவது 11.5 கோடி ரூபாய். அவர்களுடைய மொத்த லாபம், அவர்களுடைய பேலன்ஷீட்படி, 5.5 கோடி ரூபாய் நிகர லாபம். அவர்களுடைய கடைசி, பூர்த்தி கணக்கு என்ன தெரியுமா. இந்த முழு லாபத்தையும் சேல்ஸ் புரோமோஷனுக்காக செலவழித்து விட்டோம், விளம்பரத்திற்காகச் செலவழித்து விட்டோம் என்று அவர்கள் கணக்குக் காட்டுகிறார்கள். நான் இங்கே இருக்கின்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்குச் சொல்கிறேன். அவர்கள் ஏமாற்றுவது எங்களை மாத்திரமல்ல, மத்தியிலே உள்ளவர் களையும் வருமான வரி இலாகாவையும் ஏமாற்றிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதற்கு, எவ்வளவு பெரிய கொள்ளை நடைபெற்றிருக்கிறது என்பதற்கு, இதைவிட எடுத்துக்காட்டுக்கள் தேவையில்லை. இந்த இரண்டு உதாரணங்களே போதும் என்று நான் கருதுகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). அது மாத்திரமல்ல. இன்னும் சில விவரங்கள். இந்த அரசால் விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இந்த விளம்பரச் செலவுகளை யெல்லாம் ஏற்க மறுத்து விட்டது. அவர்கள் காட்டிய விளம்பரச் செலவுகளையெல்லாம் ஏற்க மறுத்துவிட்டது. அதையெல்லாம் மறுத்துத்தான் நாங்கள் உங்களுக்கு விலை நிர்ணயம் செய்வோம்