உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

காவல்துறை பற்றி

என்று கூறிவிட்டது. அதாவது புதிய விலைகளை நிர்ணயிக்கும் போது, விளம்பரச் செலவுகள் இல்லை என்ற அடிப்படையிலே தான் இப்போது விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அடுத்தது ராயல்ட்டி. ராயல்ட்டி என்றால் மதுபானம் தயாரிப்பவர்கள் பலர் பிரதானமான கம்பெனிகளுடைய டிரேட் மார்க்கை உபயோகிக்கின்றார்கள். தயாரிப்பாளர்கள் உரிய வியாபார ரகசியத்தை இவர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள். இதற்குத் தயாரிப்பாளர்கள் ராயல்ட்டி கொடுக்கிறார்கள். மதுபானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 5 நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் இந்த ராயல்ட்டி கணக்கை எழுதியிருக்கின்றார்கள். இந்த ராயல்ட்டி தொகை மதுபானங்களுடைய அடிப்படை உற்பத்தி விலையை விட அதிகமாக இருக்கின்றது அவர்கள் காட்டிய கணக்கின்படி. உற்பத்தி விலை ஒரு கேஸ்-க்கு 120 ரூபாய் என்றால், ராயல்ட்டி மாத்திரம் 125 ரூபாயாக இருக்கிறது. இதை நாம் எப்படி ஒத்துக்கொள்ள இயலும்? இந்த ராயல்ட்டி முறைக்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா என்றால் இல்லை. இது ஏதோ பரம ரகசியமோ அல்லது பிரம்ம ரசசியமோ என்பது போல அதை மறைத்து வைத்துக்கொண்டு நாங்கள் அதைச் சொல்ல மாட்டோம் என்கின்றார்கள். இப்படியிருந்த 125 ரூபாயை இப்போது விலை நிர்ணயிக்கிற கமிஷனரும் அந்தக் குழுவினரும் 25 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதை எப்படி நிர்ணயித்தார்கள் என்ற விவரத்தைச் சொல்ல விரும்புகிறேன். 'ஸ்பிரிட்' அவர்கள் கோரியது ஒரு கேஸ்-க்கு 96.88 ரூபாய். அதிலே ஆட்சேபணை யில்லை. சரி என்று நம்முடைய விலை நிர்ணயிக்கின்ற நம்முடைய குழு ஒத்துக்கொண்டு விட்டது. பாட்டிலுக்கு ஒரு கேஸ்-க்கு 42.57 ரூபாய் கேட்டார்கள். நம்முடைய குழு ஒத்துக்கொள்ளவில்லை. 21.29 ரூபாய்தான் தரமுடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதிலே குறைக்கப்பட்டது 21 ரூபாய். மூடி 7.06 ரூபாய் கேட்டார்கள். அதை மறுத்துவிட்டோம். 3.17 தான் அதற்குச் சரியான மதிப்பீடு என்று சொல்லியாகிவிட்டது. லேபிள் ஐந்து ரூபாய் என்றார்கள். ஒரு பாட்டிலுக்கு ஒரு லேபிள் ஒட்ட 5 ரூபாய் என்று கணக்குக் காட்டினார்கள். அது மறுக்கப்பட்டு 80 காசுதான் தரமுடியும் என்று கூறப்பட்டாகிவிட்டது. ராயல்ட்டி 125 ரூபாய் கேட்டார்கள். முடியாது என்று மறுக்கப்பட்டு 25 ரூபாய்