352
காவல்துறை பற்றி
குறைக்கப்பட்டது. இப்போது "அதர் ஸ்டேட்ஸ்” - மற்ற மாநிலங் களிலே ஆந்திராவிலே 60 ரூபாய்; ஒரிசாவிலே 70 ரூபாய், மராட்டியத்திலே 52 ரூபாய், மேற்கு வங்கத்திலே 82 ரூபாய். அங்கேயெல்லாம் அதிகமாக இருக்கும்போது, இங்கே 25 ரூபாயாக இருப்பானேன் என்பதற்காகத்தான் அந்த 25-ஐ 55 ஆக உயர்த்தி இருக்கிறோம். அதனால்தான் நமக்கு இன்றைய தினம் இவ்வளவு வருவாய் வருகிறது என்ற விளக்கங்களை நான் இங்கே மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்து, 177 கோடி ரூபாய் - 166 கோடி, அத்துடன் 11 கோடி ரூபாய் - காவல்துறைக்கும் தீ அணைப்புத் துறைக்கும் சேர்ந்து 177 கோடி ரூபாய்க்கான மானியத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அதிலே நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் திரு. குமரி அனந்தன் அவர்கள் பொதுவான பல கருத்துக்களை மிகச் சிறப்பாக, காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்புகள் எப்படி இருக்க வேண்டுமென்பது குறித்தும், பொதுமக்களுடைய வசதி வாய்ப்புகள் எப்படியெல்லாம் காவல் துறையினரால் பெருக்கப்பட வேண்டுமென்றும், அதற்குத் துணை நிற்கவேண்டு மென்பது குறித்தும், நடைமுறையிலே அவர் ஆங்காங்கு காண்கிற சில நிலரவங்களை எல்லாம் வைத்து அரசுக்குப் பயன் படக்கூடிய வகையில், காவல் துறைக்குப் பயன்படக்கூடிய வகையில் சில நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
அதைப்போலவே நம்முடைய உறுப்பினர் திரு. அப்துல் லத்தீப் அவர்களும், மாண்புமிகு உறுப்பினர் திரு. ரமணி அவர் களும், திரு. பொன் விஜயராகவன் அவர்களும், திரு. பூவராகன் அவர்களும், திரு. திருநாவுக்கரசு அவர்களும் மற்றும் பல்வேறு மக்களுக்கும் இருக்க வேண்டிய நல்ல உறவு, தொடர்பு இவைகளைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துக் கூறியிருக் கிறார்கள். நேற்றைக்குப் பேசிய மாண்புமிகு உறுப்பினர் ஒருவர் "எங்களுடைய புரட்டசித் தலைவர் காலத்தில்தான் காவல்துறை நன்றாகக் கவனிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார். நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் கவனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நான் ஒன்றை இந்த அவையிலே சொல்ல விரும்புகிறேன்.