உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

353

1962 ஆம் ஆண்டிற்கு முன்பே கழகத்தின் கொள்கை விளக்கப் பிரச்சாரத்திற்காக “உதய சூரியன்" எனற் நாடகத்தை நான் நடத்தியபோது அந்த நாடகம் அன்றைக்கிருந்த காங்கிரஸ் ஆட்சியால் தடை செய்யப்பட்டது. அவ்வாறு தடை செய்யப் பட்டதற்கு என்ன காரணம் என்று நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட சபையிலே வினவக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இங்கே மாண்புமிகு எதிர்க்கட்சியின் துணைத் தலைவரான திரு. திருநாவுக்கரசு அவர்கள் அமர்ந்திருப்பார். பக்கத்திலே நான் அமர்ந்திருந்தேன். நாவலர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர். அவர் வருவார் அங்கே அமர்ந்திருப்பார். பக்கத்திலே நான் அமர்ந்திருப்பேன். அப்போது நான் இந்த நாடகத்தை ஏன் தடை செய்தீர்கள் என்று அப்போதிருந்த முதலமைச்சர் திரு. பக்தவத் சலனார் அவர்களைக் கேட்டேன். பெரியவர் பக்தவத்சலனார் அப்போது சொன்னார் “நீங்கள் போலீசுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருக்கிறீர்கள். போலீசுக்கும், அரசுக்கும் மோதல் ஏற்படு வதைப்போல் எழுதியிருக்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னார். உடனே நான் “அங்கே தடை செய்துவிட்டீர்கள். ஆனால் இங்கே தடை செய்ய முடியாது” என்று அன்றைக்கே காவல்துறை நண்பர்களுக்காகப் பரிந்து பேசி வாதாடி அந்த நாடகத்திலே நான் எழுதிய ஒரு தாலாட்டுப் பாடலை அப்போதே படித்துக் காட்டினேன். அதிகமில்லை - இப்போதே சில பேருக்கு தூக்கம் வருவதைப் பார்க்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் திரு. ரமணி போன்றவர்களுக்கு தூக்கம் வருவதைப் பார்க்கிறேன். தாலாட்டுக் பாடினால் அதிகமாகத் தூங்கிவிடுவார்கள்! (சிரிப்பு). இருந்தாலும் அந்த நான்கு வரிகளை மாத்திரம் சொல்லுகிறேன்.

"போலீஸ் வேலைக்கென்று போகின்ற ஙொங்கப்பனுக்கு புத்திரனாய் வந்துதித்த தரித்திரனே கண்வளராய்! துப்பாக்கி தூக்கிக்கிட்டு போகின்ற ஙொப்பனிடம் பழம்பாக்கி கேட்டுகிட்டு வருகின்றார் கடன்காரர் காக்கியுடை போட்டுகிட்டு, சேப்பு தொப்பி மாட்டிகிட்டு- அப்போது சிவப்புத் தொப்பி போடுவது வழக்கம்.

"போகின்ற ஙொங்கப்பனுக்கு உன்னைப்போல நாலு வந்து பிறந்து விட்டால் காவியுடை வேணுமடா கமண்டலமும்