உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

357

கொண்டிருக்கிறது; கட்சி சார்பற்ற முறையிலே, அதுவும் எனக்குத் தெரியும். எனவே, அந்தந்தக் கட்சிகளின் தலைவர்களும் கூட இதிலே முனைப்பான நடவடிக்கை எடுத்து இந்த அரசுக்கு உதவ வேண்டும். அப்படி எடுக்கும்போது அந்தத் தலைவர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ய இந்த அரசு தயாராக இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். ஏற்கெனவே ஒரு திட்டம் நம்முடைய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கூட குறிப்பிட்டார், மக்கள் குழுக்களை ஆங்காங்கே அமைக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு திட்டம் என்கிற ஒரு திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் 1975 ஆம் ஆண்டு வாக்கிலே ஆரம்பிக்கப் பட்டு மிக வெற்றிகரமாக நடைபெற்றது. யாராவது மரம் ஏறி கள் இறக்கினால், யாராவது சாராயம் காய்ச்ச முற்பட்டால் அவர்களை மக்களே பிடித்து இழுத்து வந்து, பஞ்சாயத்திலே வைத்து அவர்களே தண்டித்து, அந்தத் தண்டனையை அவர்களே ஏற்றுக்கொண்டு, பிறகு தவறு செய்வது இல்லை என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த ஒரத்தநாடு திட்டம் நல்ல முறையிலே நடைபெற்றது. அதற்குப் பிறகு ஏதோ தொய்வு ஏற்பட்டு, திட்டமே இப்பொழுது அழிந்து ஒழிந்து விட்டது. அதைப் போன்ற ஒரு திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கொண்டுவர முடியுமா என்றும் இந்த அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.

நேற்றைக்குப் பேசிய நம்முடைய அ. தி. மு. க. உறுப்பினர் சின்னசாமி அவர்களும், இன்று காலையில் பேசிய மு. க. ஸ்டாலினும், நண்பர் பொன், விஜயராகவன் அவர்களும் கூட எடுத்துச் சொன்னார்கள். மதுவிலக்கு வழக்குகளைக் கவனிப்பதற்காகத் தனியாக ஒரு அமைப்பு இப்பொழுது இயங்கி வருகிறது. இந்த அமைப்பே தேவையில்லை என்று குறிப்பிட் டார்கள். நாங்களும்கூட அப்படித்தான் கருதுகிறோம். எனவே, இது குறித்து நன்கு பரிசீலித்து, விரைவிலே முடிவெடுக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.

காவலர்களுடைய வசதிகளைப்பற்றி நம்முடைய திரு. பூவராகன் அவர்கள் குறிப்பிட்ட பொழுது, அவர்களுக்கு இலட்சம் இலட்சமாகப் பணம் வருவதாகவும் சொல்கிறோம்,