உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

காவல்துறை பற்றி

அதே நேரத்திலே வசதிகளைப் பற்றியும் பேசுகிறோம் என்று சொன்னார்கள். அதிலேகூடச் சிலர்தான் அப்படி வசதி படைத்தவர்கள். பலர் இன்றைக்கும் வாடிக்கொண்டிருப்பவர்கள் தான். அதை நாம் மறந்து விடுவதற்கில்லை.

அதைப்போலவேதான திரு. லத்தீப் அவர்கள் பேசும் பொழுதும் அந்த வசதிகளைத் செய்து தரவேண்டும், அவர் களுடைய குடியிருப்புகளையெல்லாம் ஒழுங்குபடுத்த வேண்டு மென்று சொன்னார்கள். நேற்றைக்குப் பேசிய காங்கிரஸ் நண்பர்கள் கூட காவலர்களுடைய குடியிருப்பு வாரியத்தை நாம் ஒழித்து விட்டோம் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார்கள். பல வாரியங்கள் அகற்றப்பட்டு, வாரியங்களுக்கு அதிகாரப் பூர்வமற்ற தலைவர்களை அமைப்பது என்பது நிறுத்தப்பட்டு விட்டு, அந்த வரிசையிலே இந்தக் காவலர் குடியிருப்பு வாரியமும் அகற்றப்பட்டதே தவிர, காவலர் குடியிருப்பு இருக்கிறது. அந்த வாரியம் இல்லாவிட்டாலும்கூட வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக இந்தத் திட்டம் தொடர்ந்து நடத்தப்படும். இது கைவிடப்பட்டு விடவில்லை. காவலர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அரசு எப்பொழுதும்போல், பொதுப் பணித் துறையின் மூலம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என்பதை நான் இங்கே

தெரிவித்துக்கொள்கிறேன்.

காவல் நிலையங்களைப்பற்றி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. திருநாவுக்கரசு அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள். நான் அவருக்கு ஞாபகப்படுத்துகின்றேன். அவர் ரொம்பக்குறை சொல்லும்பொழுதெல்லாம் எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம், நாம் வந்த மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. அங்கிருந்தபொழுது சொல்ல முடியாதவைகளையெல்லாம் இன்றைக்குச் சொல்லி, தன்னுடைய வேதனையைத் தீர்த்துக் கொள்கிறார் என்றுதான் நான் கருதினேன்.

இதெல்லாம் 1987-1988-இல் நடைபெற்ற நிகழ்ச்சிகள். 1987-88-ல் 38 இடங்களில் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அன்றைக்கு அறிவிக்கப்பட்டது. 38 இடங்கள். ஆனால் 19 இடங்களிலே மாத்திரம்தான் காவல் நிலையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதும் 19 இடங்களும் விடப் பட்டுவிட்டன. மீதமுள்ள 19 இடங்களுக்கு இப்பொழுது இந்த