உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

359

நிதி ஒதுக்கீட்டிலே பணம் ஒதுக்காவிட்டாலும்கூட, துணை மானியத்திலே அது ஒதுக்கப்படும் என்கின்ற அறிவிப்பை நான் இங்கே உங்களுக்குத் தந்து, அந்த 19-இல் எங்களால் முடிந்த அளவிற்கு இப்பொழுது ஒரு பத்துபுதிய காவல் நிலையங்களைக் கீழ்கண்ட இடங்களிலே ஏற்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.

சிதம்பரனார் மாவட்டத்தில் தட்டார் மடம், குமரி மாவட்டத்தில் குருந்தங்கோடு. நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தில் கூடங்குளம். காமராஜர் மாவட்டத்தில் கம்மாபட்டி, சிப்காட் காம்ப்ளெக்ஸ், மானாமதுரை. வடார்க்காடு மாவட்டத்தில் அம்பலூர். திருச்சி மாவட்டத்தில் சிந்தாமணிப்பட்டி. செங்கை- அண்ணா மாவட்டத்தில் காவாங்கரை கிராமம். தஞ்சை மாவட்டத்தில் திருவையாறுக்கு அருகிலே உள்ள மருவூர். சேலம் மாவட்டத்தில் முலசி கிராமம்.

மேலும் செங்கை-அண்ணா மாவட்டத்திலே பெரிய குப்பம், குடந்தை பட்டீஸ்வரம் ஆகிய இரண்டு இடங்களில் புறக் ஆ காவல் நிலையங்களை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

உத்தரகோசமங்ககை, ஆசாரிப்பள்ளம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள புறக் காவல் நிலையங்களை முழுக் காவல் நிலையங்களாக உயர்ந்த அரசு முடிவு செய்துள்ளது.

அதோடு, சென்னையைச் சுற்றி புறநகர்ப் பகுதியிலே உள்ள வில்லிவாக்கம். ராஜமங்கலம், விருகம்பாக்கம், திருவான்மியூர், வேளச்சேரி, பரங்கிமலை, மீனம்பாக்கம், கருணாநிதிநகர், ஆதம்பாக்கம் ஆகிய 9 காவல் நிலையங்களை செங்கை-அண்ணா மேற்கு மாவட்ட எல்லையிலேயிருந்து பிரித்து சென்னைப் பெருநகரக் காவல் சரகத்தோடு சேர்ப்பது என அரசு முடிவு எடுத்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தொகுதியில் குலசேகரத்திலே சர்க்கிள் அலுவலகம், அங்கே காவல் பகுதியிலே மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும், மலையோரப் பகுதியாக இருப்பதாலும், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப் படுகிறது என்றும், ஆகவே அந்தக் காவல் நிலையத்தை ஒரு சர்க்கிள் காவல் நிலையமாக மாற்றி, வண்டி வசதி, கூடுதல் காவலர்கள் நியமிப்பது குறித்து திரு. நடேசன் ஒரு வெட்டுப்