360
காவல்துறை பற்றி
ஒரு
பிரேரணை கொடுத்திருந்தார். அது இப்பொழுது ஏற்றுக்கொள்ளப் பட்டு, குலசேகரம் காவல் நிலையம் சர்க்கிள் காவல் நிலையமாக ஆக்கப்படும் என்பதையும் இந்த அரசு ஆய்ந்து, நடப்பாண்டில் கதம்பக்கோடு என்ற இடத்திலே காவல் நிலையம் அமைக்கப்படும் என்பதையும், தெரிவித்துக்கொள்கிறேன். தீயணைப்பு நிலையங்கள் பற்றியும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விரிவாக இங்கே பேசியிருக்கிறார்கள். ஒன்றை அவருடைய நினைவிற்கு கொண்டு வருகிறேன். 22-7-1986 அன்று நடந்த கால ஆட்சி 21 இடங்களில் தீயணைப்பு நிலை யங்கள் ஏற்படுத்தப்படும் என்று அரசாணை பிறப்பித்தது. பிறகு 12-1-1987 அன்று மேலும் எட்டு இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படும் என்று அரசு இன்னொரு ஆணை பிறப்பித்தது. பிறகு 28-10-1987 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மேலும் 19 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே, 48 இடங்கள் அறிவிக்கப்பட்டது இந்த மூன்றாண்டுகளில். ஆனால் மூன்று இடங்களிலேதான் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப் பட்டது. ஆகவே மீதமுள்ள - நான் ஒன்றும் குறை சொல்ல வில்லை - 45 இடங்களிலிருந்து 10 இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே தீயணைப்பு நிலையங்கள் இந்த ஆண்டு ஏற்படுத்தப் படும் என்று அறிவிக்கிறேன். இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர். தர்மபுரி
மாவட்டத்தில் பாலக்கோடு, தென்னாற்காடு மாவட்டத்தில் சங்கராபுரம், தஞ்சை மாவட்டத்தில் குடவாசல், தரங்கம்பாடி, திண்டுக்கல் காயிதே மில்லத் மாவட்டத்தில் நிலக் கோட்டை, திருச்சி மாவட்டத்தில் புகளூர், நெல்லை கட்ட பொம்மன் மாவட்டத்தில் வள்ளியூர், கோவை மாவட்டத்தில் பல்லடம், சேலம் மாவட்டத்தில் கொல்லிமலை.
அதன்னியில் சென்னை மாநகரத்தில் - கேள்வி ஒன்றுக்கு நான் பதில் அளிக்கும்போது சொன்னதையொட்டி சென்னை மாநகரத்தைப்போல மதுரையிலே, கோவையிலே கமிஷனர்கள் அமைக்கப்படுவார்கள். உறுப்பினர்கள் கேட்டுடக்கொண்டதைப் போல இரண்டு துணைக் கமிஷனர்களும் நியமிக்கப்படுவார்கள். மதுரை, கோவை ஆகிய இடங்களில் நியமிக்கப்படுவார்கள். கமிஷனர்கள் ஐ. ஜி. அந்தஸ்தில் இருப்பார்கள். இந்த நிதிாயண்டில்