உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

361

அது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியோடு

தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கம் கழக ஆட்சியில் 1969-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்தில் இந்த விழா நடைபெற்றது. ஆனால் 1976-ம் ஆண்டில் 'எமர்ஜென்சி' வந்ததால் இந்த விருது அளிக்கப் படவில்லை. அணிவகுப்பும் நடைபெறவில்லை. 1977-ம் ஆண்டிலிருந்து 1983-ம் ஆண்டு வரையில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து இந்த விருதுகள் சென்னை மாநகரில் வழங்கப்பட்டன. 1984-85-ல் மதுரையிலும், 1986-ல் கோவையிலும் இந்த விருது வழங்கப்பட்டது. 1987-ல் விருதுகள் அறிவிக்கப்பட்டும் அணி வகுப்பு நடைபெறவில்லை. 1988-ல் குடியரசுத் தலைவர் ஆட்சியில் இந்த விருது வழங்கப்படவில்லை. எனவே இந்த 1989 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடக்கவிருக்கும் அண்ணா பிறந்தநாளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் விருதுகள் வழங்கும் விழா ஒரு மாவட்டத் தலைநகரில் மீண்டும் தொடங்கப் படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் 1,034. தொலைபேசி வசதி செய்யப்பட்டவை 966, 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தரப்பட அறிக்கையின்படி 756 காவல் நிலையங் களில் தொலைபேசி வசதி செய்து தரப்பட்டது. எனவே 1977-ம் ஆண்டிற்கு பிறகு இந்த 12 ஆண்டுகளில் 210 காவல் நிலையங் களுக்குத்தான் புதிய தொலைபேசி வசதி செய்து தரப்பட் டிருக்கிறது. இன்னும் தொலைபேசி வசதி செய்து தரப்படாமல் உள்ள காவல் நிலையங்கள் 68, புறநகர்க் காவல் நிலையங்கள் 20. எனவே இந்த 88 காவல் நிலையங்களுக்கும் இந்த ஆண்டிலே தொலைபேசி வசதி செய்துதரப்பட்டு, தொலைபேசி வசதி இல்லாத காவல் நிலையங்களே தமிழ் நாட்டிலே இல்லையென்ற நிலை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துக் கொள்கிறேன். இதற்கு தொடரா செலவினமாக ரூபாய் இரண்டு லட்சத்து ஏழு ஆயிரத்து ஆறுநூற்று என்பதும் தொடர் செலவினமாக 11 லட்சத்து 61 ஆயிரத்து 600-ம் ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்